மேலும் அறிய

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் 451,395,397 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் சுடப்படுவதும் கடந்த பல  ஆண்டுகளாக தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மீனவர்களே இந்த தாக்குதலுக்கு அதிக அளவு ஆளாகி வருகின்றன. இதற்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்த போதிலும் தற்போது வரை இதற்கு ஒரு உரிய தீர்வு இல்லாமல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது நடந்தேறி வருகிறது.


தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21 - ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண் குமார், மாதவன், கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர். நேற்று காலை காரைக்கால் தென்கிழக்கு 44 நாட்டிகல்  தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் நடு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரும்பு ரோப்பால் மீனவர்களை கொடூரமாக தாக்கி உள்ளனர். 


தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

அதனைத் தொடர்ந்து கரை திரும்பிய 6 மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று  மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 12 பேர் அடங்கிய குழுவினர் வந்து கொடூர தாக்குதல் நடத்தி, படகு எஞ்சின், ஜிபிஎஸ் கருவி, வலைகள், ரெண்டு பேட்டரி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 


தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மாவட்ட ஆட்சியர்  மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்ய கடலோர காவல் படை குழுமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார்  அத்துமீறி நுழைதல் (451), கூட்டுக் கொள்ளை (395), கொடும் காயங்கள் ஏற்படுத்துதல்(397) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக இலங்கை கடற்படை மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றனர் என்பதை சுட்டிக் காட்டியதுடன், இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.


தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். நமது மீனவர்கள் வாழ்வாதராத்துக்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர். மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதர வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" சொத்துக்காக விஷ ஊசி போட்டு கொலை " மாரடைப்பு என நாடகம் !! இறுதியில் நடந்த சோகம்
பணம் வாங்கிய வீடியோ வைரல்: தவெக பிரமுகருக்கு நேர்ந்த கதி.. அதிரடி காட்டிய போலீசார்!
பணம் வாங்கிய வீடியோ வைரல்: தவெக பிரமுகருக்கு நேர்ந்த கதி.. அதிரடி காட்டிய போலீசார்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
Cheapest Strong Hybrid: நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
Embed widget