மேலும் அறிய

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லை வழக்கு - 3 ஆவது நாளாக தொடர்ந்த குறுக்கு விசாரணை

பெண் எஸ்.பி.யிடம் 3 ஆவது நாளாக எதிர்தரப்பு குறுக்கு விசாரணை செய்த நிலையில் அந்த விசாரணை நிறைவடையாததால் வருகிற 20ஆம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணை தொடரும் என உத்தரவு

தமிழ்நாட்டில் எஸ்.பி.யாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்தார். அப்போது அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ஒருவர், அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மாவட்ட எஸ்.பியாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறப்பு டிஜிபியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதியிடமும், உள்துறைச் செயலாளரிடமும் புகார் அளித்தார்.

இந்நிலையில், சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இப்புகார் குறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து, பெண் ஐபிஎஸின் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்

இந்த வழக்கு விசாரணையில், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புகார் குறித்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்காணித்து வருகிறார். இந்த விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளோம் என கூறியிருந்தார்.

இந்த புகார் விசாரணை தொடர்பாகத் தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி இருந்தனர். இதற்கிடையே, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் நடுவர் முன்பு  கடந்த ஜூலை 28ஆம் தேதி அன்று பெண் ஐபிஎஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்தார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லை வழக்கு - 3 ஆவது நாளாக தொடர்ந்த குறுக்கு விசாரணை

இந்நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி  ஜூலை 29 விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகியோர்  நேரில் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. பெண் எஸ்.பி.யிடம் இன்று 3-வது நாளாக எதிர்தரப்பு குறுக்கு விசாரணை செய்த நிலையில் அந்த விசாரணை நிறைவடையாததால் வருகிற 20ஆம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணை தொடரும் என்று நீதிபதி கோபிநாதன் உத்தரவுவிட்டார் .

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget