மேலும் அறிய

பேருந்தில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கொலை - புதுச்சேரி அருகே பயங்கரம்

புதுச்சேரி அருகே பேருந்தில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் குமரன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (46).  இவர் கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் என்ற இடத்தில் புதிதாக வீடு கட்டி வந்தார். சண்முகசுந்தரம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு சண்முக சுந்தரம் புதுச்சேரியில் இருந்து தனியார் பேருந்தில் கண்டமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் பேருந்தில் வந்த ஒரு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. அரியூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய சண்முக சுந்தரத்தை பேருந்தில் தகராறு செய்த கும்பல் அவரை தலையில் பின் பக்கமாக தாக்கினர். இதில் நிலைத்தடுமாறி சண்முகசுந்தரம் கீழே விழுந்தார்.

பின்னர் அங்கு கிடந்த கற்களால் சண்முக சுந்தரத்தின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சண்முகசுந்தரம் இறந்து கிடந்தது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் வேலையன் தலைமையிலான போலீசார் கொலையான சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 

Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்

Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!

துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்

புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

 

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget