மேலும் அறிய
Advertisement
Crime: வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த பிரதர்ஸ்; சிக்கிய தம்பி, அண்ணன் எஸ்கேப்
அழகு செடியென நினைத்து வீட்டில் உள்ளவர்கள் வாசலில் போற்றிகோவில் வைத்த போது தான் வெளியே தெரிய வந்துள்ளது.
நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கஞ்சா செடியை கைப்பற்றி தம்பி ராகுலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணன் பிரகாஷை தேடிவருகின்றனர்.
நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக எஸ்பி ஹர்ஷ்சிங் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு போலீசார் நாகை அருகே நரிமணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21) என்பவரது வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து ராகுலை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது விசாரணையில், ராகுலின் சகோதரர் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருந்து கஞ்சா விதையினை எடுத்து வந்து தோட்டத்தில் விதைத்து வளர்த்துள்ளார். இதனை அழகு செடியென நினைத்து வீட்டில் உள்ளவர்கள் வாசலில் போற்றி கோவில் வைத்த போது தான் வெளியே தெரிய வந்துள்ளது. விதையை எடுத்து வந்து வளர்த்த பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர். நாகூர் அருகே கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion