Crime: பகீர்.. காதலி, உடன் பணிபுரியும் பெண்கள்! ஐ.டி. ஊழியரின் செல்போனில் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள்!
பெங்களூரில் ஐ.டி. ஊழியரின் செல்போனில் பல பெண்களின் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பல துறைகளில் கோலோச்சி இன்று முன்னேறி வந்தாலும் பெண்களுக்கு எதிராக பல இடங்களில் பாலியல் சீண்டல்களும், வன்கொடுமைகளும், அவர்களது புகைப்படங்களை தவறாக சித்தரிக்கும் போக்கும் அரங்கேறி வருகிறது. சிலர் பெண்களின் தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை அவர்களுக்கே தெரியாமல் எடுக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.
ஐ.டி. ஊழியர்:
இந்த சூழலில், பெங்களூரில் ஐ.டி. ஊழியர் ஒருவர் தன் காதலி, தன்னுடன் பணிபுரியும் பல பெண்கள் உள்பட பல பெண்களின் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்களை வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் ஆதித்யா சந்தோஷ். அவருக்கு வயது 25.
இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது பெண் ஒருவரை கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தார். இந்த நான்கு மாதங்களில் இவர்கள் 2 பேரும் அவ்வப்போது ஒன்றாக இருந்துள்ளனர். அந்த சமயங்களில் சந்தோஷம் இருவரும் இருக்கும் புகைப்படத்தை செல்போனில் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அந்த பெண் அழிக்குமாறு சந்தோஷிடம் கூறியுள்ளார்.
13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள்:
ஆனால், சந்தோஷ் அந்த புகைப்படத்தை அழிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில், சந்தோஷிற்கு தெரியாமல் அந்த புகைப்படத்தை அழிக்க அந்த பெண் முயற்சித்துள்ளார். இதற்காக சந்தோஷின் அனுமதி இல்லாமல் சந்தோஷின் செல்போனை எடுத்து கேலரி உள்ளே சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
சந்தோஷின் செல்போனில் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மட்டுமின்றி, அந்த பெண்ணுடன் பணிபுரியும் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்துள்ளது. இதைக்கண்டு அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உடன் பணிபுரியும் பெண்கள் உள்பட பல பெண்களின் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் அந்த புகைப்படங்களை வைத்து எந்த பெண்ணுக்கும் பாலியல் சீண்டலோ, பாலியல் தொல்லையோ அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த சந்தோஷ் பணிபுரியும் நிறுவனம், அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
ஐ.டி. ஊழியர் ஒருவரிடம் பல பெண்களின் 13 ஆயிரம் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் பரபரப்பு; வடமாநில தொழிலாளியை குத்திக் கொன்று செல்போன் பறிப்பு
மேலும் படிக்க: Accident : கொடூர விபத்து.. கார் - ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியதில், நண்பர்கள் பரிதாபமாக உயிரிழப்பு