மேலும் அறிய

Crime: அலர்ட் மக்களே! 84 வங்கிக் கணக்குகள்..ரூ.854 கோடியை அபேஸ் செய்த மர்ம கும்பல்..விசாரணையில் பகீர் தகவல்!

கிரிப்டோ கரன்சியில் முதலீடு என்று கூறி மக்களிடம் ரூ.854 கோடியை பறித்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Bangalore Crime: கிரிப்டோ கரன்சியில் முதலீடு என்று கூறி மக்களிடம் ரூ.854 கோடியை பறித்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றன. தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளளது.

ஆன்லைன் மோசடி:

நாடு முழுவதும் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, கேரளா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இருந்து பலரும் முதலீடு  செய்துள்ளனர்.  மேலும், வாட்ஸ் அப்பில் வேலை வாங்கி தருவதாகவும் குறுத்தகவல் ஒன்றையும் அனுப்பி உள்ளது. அதை பார்த்துவிட்டு வேலைக்காக தொடர்பு கொள்ளும் நபர்களை டெலிகிராம் குரூப்பில் சேர்த்துவிடுகின்றனர்.  அதன் பின்னர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்று கூறி பல தொகையை வசூல் செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் 5000 ரூபாயை வரை லாபம் ஈட்டலாம் என்று கூறியுள்ளனர்.

இதனால் மக்கள், 10,000 ரூபாய் முதல் லட்சக்கணக்கான தொகையை முதலீடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலின் பல்வேறு வங்கி கணக்குகளின் செலுத்தியுள்ளனர். முதலீடு செய்த பின்னர், நீண்ட நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில்  புகார் அளித்தனர். விசாரணையில் ஆயிரக்கணக்கானோரை கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

ரூ.854 கோடி மோசடி:

இதனை அடுத்து, பெங்களூருவை சேர்நத் மனோகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் இவரின் கூட்டாளியான சீனிவாசன், சக்ரதர், சோமசேகர், பனீந்திரா,வசந்த் ஆகியோரை கைது செய்தனர்.  இந்த கும்பல் மீது நாடு முழுவதும் 5,013 வழக்குகள் பதிவாகி உள்ளது. பெங்களூருவில் மட்டும் 17 வழக்குகள் உள்ளன.  மோசடி செய்த ரூ.854 கோடி பணத்தை உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள 84 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.  இந்த கும்பலிடம் இருந்து 5 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 13 செல்போன்கள், 7 லேப்டாப்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Embed widget