Online crime: ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன், மனைவி.. சிக்கியது எப்படி?
ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிட்ட தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
![Online crime: ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன், மனைவி.. சிக்கியது எப்படி? Bengaluru: 32 year old man and his partner arrested for sharing Explicit pictures and videos online Online crime: ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன், மனைவி.. சிக்கியது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/c58b7ea9db999eb4770f5eb11af0bb40_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்து அவ்வப்போது சில குற்றங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் ஆன்லைன் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகி தம்பதி ஒன்று செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதியை தற்போது காவல்துறை கைது செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வினய் குமார் என்ற 32 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய 27 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ட்விட்டர் வலைதளத்தில் ஒரு போலியான கணக்கை தொடங்கியுள்ளார். அந்த கணக்கில் தன்னுடைய மனைவியின் அந்தரங்க படங்களை பதிவேற்றி வந்துள்ளார். அதில் தாங்கள் பெங்களூருவில் வசிக்கும் ஜோடி என்று கூறியுள்ளார். மேலும் அவர்களை நேரில் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் டெலிகிராம் தளத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க:ரவுண்டு கட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை.. லஞ்சபணத்தை விழுங்கிய வி ஏ ஓ.. தொண்டையில் சிக்கிய பணம்!
அதன்பின்னர் டெலிகிராம் தளத்தில் தன்னை தொடர்பு கொண்டவர்களிடம் மனைவியின் வீடியோக்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலருக்கு அவர்களுடைய இல்லத்தின் முகவரியை அனுப்பி நேரில் வந்து மனைவியுடன் உடலுறவு வைத்து கொள்ளவும் அனுமதி அளித்ததாகவும் தெரிகிறது. இந்தச் சூழலில் இவருடைய போலி ட்விட்டர் கணக்கு தொடர்பாக ஒருவர் பெங்களூரு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பெங்களூரு காவல்துறையினர் இந்த போலி கணக்கு தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க ஒரு தனிப்படை அமைத்து பெங்களூரு கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். அந்த தனிப்படை நடத்திய விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த தம்பதி தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள், “நாங்கள் ஆன்லைனில் ஆபாச வீடியோக்கள் பார்த்து இதுபோன்ற வீடியோக்கள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. ஆகவே நாங்களே இதுபோன்று ஆபாச வீடியோ எடுக்க திட்டமிட்டு இந்த செயலை செய்தோம்” என்று அந்த தம்பதி காவல்துறையிடம் தெரிவித்துள்ளது.
இந்த தம்பதி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67ஏ-ன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஆன்லைனில் ஆபாச வீடியோக்கள் பார்த்து தம்பதி ஒன்று இப்படி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛யாரா இருந்தாலும் வெட்டுவேன்...’ அலும்பு பேசி எலும்பு முறித்துக் கொண்ட அதிமுக ஒன்றிய செயலாளர் !
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)