கேரள அழகிகள் குடித்த குளிர்பானத்தில் போதை மருந்து? போலீஸாருக்கு மர்ம SMS.. தொடரும் மர்மம்!
கார் சென்றுகொண்டிருக்கும் குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது எனத் தெரியவந்தது.
கேரள மாடல்கள் மரணத்தில் திடீர் திருப்பமாகப் பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மாடல்கள் இருவரும் அருந்திய குளிர்பானத்தில் அவர்களுக்குத் தெரியாமல் அதிகம் போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாகவும்.அது தெரியாமல் கார் ஓட்டிச் சென்றதால்தான் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள காவல்துறைக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். யார் அனுப்பியது என்கிற தகவல் இதுவரைக் கிடைக்கப் பெறவில்லை. மேலும் மாடல்களுக்கு வலிந்து போதை மருந்து கொடுக்கப்பட்டதா என்பதை காவல்துறை சிசிடிவி கேமிரா வழியாக ஆய்வு செய்துவருகிறது.
முன்னதாக, கேரளாவின் முன்னாள் அழகியான ஆன்ஷி கபீரும், இரண்டாம் இடம் பிடித்த அஞ்சனா ஷாஜனும் நவம்பர் 1ம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தனர். கொச்சியில் நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் 2019ம் ஆண்டு அழகிப்போட்டியில் கலந்துகொண்டு முதல் இரு இடங்களை பிடித்தவர்கள்.
விபத்து நடந்த போது நடத்தப்பட்ட விசாரணையின்படி, கார் சென்றுகொண்டிருக்கும் குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்து அப்பளமாக நொறுங்கியது. உயிரிழந்த இருவர் உட்பட மேலும் இருவர் காரில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னால் அழகிகள் ஆடி சொகுசு காரால் பலவந்தமாக தொடரப்பட்டதாகவும், அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. விபத்துக்கு முன்னதாக அழகிகள் இருவரும் கொச்சியில் நம்பர் 18 ஹோட்டலில் இருந்தே கிளம்பியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அங்கு எதுவும் இல்லை. இது தொடர்பான விசாரணையின் போது, ஹோட்டலில் இருந்து பார்ட்டியை முடித்துவிட்டு தனது காரில் முன்னாள் அழகிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களை ஆடி சொகுசு கார் ஒன்று வேகமாக பாலோ செய்துள்ளது. அந்த காரில் நம்பர் 18 ஹோட்டலைச் சேர்ந்த ராய் இருந்துள்ளார். அதனால் ராய் அவர்களை ஃபாலோ செய்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
போலீசாரின் பார்வையின்படி அந்த ஆடி கார வேண்டுமென்றே அவர்களை ஃபாலோ செய்திருக்க வேண்டும், அல்லது இரு காருக்கும் இடையே ரேஸ் மாதிரியான போட்டி நடந்திருக்க வேண்டும் என கணிக்கின்றனர். ஆனால் மலையாள செய்தி தொலைக்காட்சி தகவலின்படி, பார்ட்டியின் போதே முன்னாள் அழகிகளுக்கும், ராயுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுதான் காரை பின் தொடரவும் செய்துள்ளார். இரு காரின் வேகம் முன்னாள் அழகிகளின் காரை விபத்துக்குள் சிக்க வைத்துள்ளது என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஹோட்டலில் இருந்த சிசிடிவி ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக நம்பர் 18 ஹோட்டலின் உரிமையாளர் ராய் உள்ளிட்ட 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.