வங்கியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்.! யாருடையது.? வெளியான திடீர் டுவிஸ்ட்
சென்னையில் வங்கி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த 1.250 கிலோ தங்க கட்டிகள் யாருடையது என போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வங்கியில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்
தங்க நகைகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கமே 12ஆயிரம் ரூபாயை தாண்டி நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த பரபரப்பான நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள HDFC வங்கியில் கேட்பாரற்று கிடந்த 1.250 கிலோ தங்க கட்டிகள் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த 5ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள HDFC வங்கி பரபரப்பாக இயங்கி வந்தது. அப்போது பர்தா அணிந்த வந்த பெண் ஒருவர், தனது பெயர் ஷர்மிளா பானு எனவும், தனது கணவர் பெயர் அப்துல்லா என அறிமுகம் செய்துள்ளார்.
வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும், மேலும் நகைகளை வைக்க லாக்கர் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அப்போது வங்கியில் இருந்த ஊழியர்கள் மேலாளர் வெளியே சென்றுள்ளதாகவும் சிறிது நேரம் காத்திருக்கும் படி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேலாளர் வந்த நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வங்கி கணக்கு தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பர்தா அணிந்து வந்த பெண் யார்.?
இதனையடுத்து மதியத்திற்கு பிறகு வங்கியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பேக்கில் ஒரு கிலோ தங்க கட்டியும், 250 கிராம் தங்க நகைகளும் இருந்துள்ளது. இது தொடர்பாக வங்கியில் விசாரித்தில் யாரும் உரிமை கோரவில்லை. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக வங்கி மேலாளர் வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வங்கியில் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 5ஆம் தேதி வங்கிக்கு வந்த சென்றவர்கள் யார் என சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வ நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து 1.250 கிலோ தங்க கட்டிகள் தொடர்பாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் இந்த வங்கியின் முன்னாள் மேலாளர் பத்மப்பிரியா சிக்கியுள்ளார். ஏற்கனவே வங்க மேலாளராக இருந்த பத்மப்பிரியா, நீண்ட நாட்களாக வங்கி லாக்கரை உரிமை கோராதவர்களின் லாக்கரில் இருந்து நகைகளை திருடியுள்ளார். அந்த நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் உல்லாசமாக இருந்துள்ளார்.
சிக்கிய முன்னாள் வங்கி மேலாளர்
இந்த நிலையில் தான் வேளச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் தான் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் அவர் தன்னுடைய நகைகளை ஹெச்டிஎஃப்சி வங்கியில் லாக்கரில் 258 கிராம் வைத்து இருந்த நிலையில் அதனை திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நகைகளை திருடியது வங்கி மேலாளர் பத்மபிரியா என தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி பர்தா அணிந்த வங்கிக்கு வந்த பத்மபிரியா நகைகளை விட்டு சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பத்மபிரியா கைது செய்த போலீசார், வங்கியில் விட்டு சென்ற தங்க நகைகள் வங்கி லாக்கரில் இருந்து திருடிய நகைகளா அல்லது வேறு இடத்தில் திருடப்பட்ட நகைகளா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





















