மேலும் அறிய
Advertisement
நடுரோட்டில் ரூபாய் 535 கோடி பணத்துடன் நின்ற லாரி.. பரபரப்பான தாம்பரம்..! என்ன நடந்தது..?
தாம்பரத்தில் பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னை ரிசர்வ் வங்கி பணம்
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து இரண்டு வாகனங்களில் விழுப்புரம் பகுதியில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு கொண்டு செல்வதற்காக சுமார் 535 கோடி ரூபாய் பணமானது சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தாம்பரம் சானடோரியம் கடந்து தாம்பரம் சித்த மருத்துவமனை அருகில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு வாகனங்களில் ஒரு வாகனத்தில் திடீரென புகை வந்து வாகனம் பழுதடைந்துள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
535 கோடி ரூபாய்
535 கோடி ரூபாய் பணத்திற்கு பாதுகாப்பிற்காக ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் , ஒரு சப் இன்ஸ்பெக்டர் என மொத்தம் 17 போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பணமானது கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு வாகனம் பழுதடைந்ததால், உடனடியாக உடன் வந்த போலீசார் வாகனத்தை அருகில், இருந்த சித்த மருத்துவமனையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இரண்டு வாகனங்களும் தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நிறுத்த வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தாம்பரம் போலீசாரம் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பணத்துடன் வந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் இருக்கின்றனர்.
அனுமதி மறுப்பு:
பழுதடைந்த வாகனத்தை பழுது நீக்கும் பணியானது நடைபெற்றது. வாகனத்தை பழுது பார்க்க முடியாததால், உடனடியாக தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இருந்து, மீண்டும் இந்த பணத்தை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 535 கோடி ஏற்றி வந்த வாகனங்கள் பழுதடைந்து, சித்த மருத்துவமனை வளாகத்திற்குள் நிற்கவைக்கப்பட்டுள்ளதால், சித்த மருத்துவ வளாகத்திற்கு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் தாம்பரம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ரிசர்வ் வங்கியில் இருந்து மற்றொரு வங்கிகளுக்கு, பணத்தைக் கொண்டு செல்லும் பொழுது, வழியில் யாரும் அந்த சீலை பிரிக்க கூடாது என்பதால் ரிசர்வ் வங்கி கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion