மேலும் அறிய
Arudhra scam : ஆருத்ராவும் ஆர்.கே.சுரேஷும்.. விடாமல் துரத்தும் போலீஸ்.. பின்னணியில் அடுத்தடுத்து நடக்கும் விசாரணை..!
ஆர்.கே. சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்

ஆர்.கே.சுரேஷ்
தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடிகள்
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒரு மாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கூடிய விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்கள் முடக்கம்
மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்.கே. சுரேஷ் சிக்கியது எப்படி ?
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆருத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைதான, ரூசோ நடிக்கும் திரைப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பதும் சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தன்னை குட்டி பிரபலமாக நினைத்துக்கொண்டு சுற்றி திரிந்த ரூசோவிடம், விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது, ஆர்.கே. சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், இந்த வழக்கில் இருந்து , தானும் தனது நண்பர்களும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக, 12 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

மேலும் , இன்னும் சில கோடிகளை செலவு செய்தால், இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடலாம் என ஆர் .கே சுரேஷ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரூஸோ கைதான தகவலை அறிந்தவுடன், நடிகர் சுரேஷ், துபாய் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பது, உறுதியாகியுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
லுக் அவுட் நோட்டீஸ்
அதேபோல ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் ஆர்.கே.சுரேஷ், போலீசாரின் சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவர் போலீசாரிடம் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
விரிவடையும் விசாரணை
ரூசோவிடம் ஆர்கே சுரேஷ் வாங்கிய பணம், யார் யாருக்கு எவ்வாறு கொடுக்கப்பட்டது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ரூசோ மற்றும் ஆர்கே சுரேஷ் சில முக்கிய நபர்களை சந்தித்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தனியாக இருவரும் பல முக்கிய நபர்களை சந்தித்ததும், விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், இந்த வழக்கிலிருந்து இயக்குனர்களை விடிவிப்பதற்காக அந்த முக்கிய நபர்களை சந்தித்தார்களா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள ஆர்.கே சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை துவங்கினால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement