மேலும் அறிய

Aarudhra gold scam: ஆருத்ரா சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை; அதிரடி காட்டும் போலீஸ் - அடுத்த அப்டேட் என்ன ?

Aarudhra gold scam : "ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 127 அசையா சொத்துக்களை சென்னை பொருளாதார, குற்றப்பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடிகள்
 
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா ( aarudhra gold trading company ) என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒருமாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பணத்தை திருப்பிக் கொடுத்த நடவடிக்கை
 
ஆருத்ராவில் முக்கிய ஏஜென்ட்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சரி பார்த்து சுமார் 2000 பேர் வரை ஏஜெண்டர்களாக பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இவற்றில் 200 ஏஜெண்டுகள் பல கோடி ரூபாய்களை முதலீடுகளாக பெற்று, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.முதல்கட்டமாக அதிக பணம் வசூலித்த 200 பேரை கண்டறிந்து தேவை ஏற்பட்டால் அவர்களை கைது செய்யவும், அதிக பணம் வசூலித்த 200 முகவர்களிடம் 30% பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.
 
குற்றப்பத்திரிகை தாக்கல்
 
இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விசாரணை நடைபெறும் இடையில், தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
 
சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை
 
ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 127 அசையா சொத்துக்களை சென்னை பொருளாதார, குற்றப்பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மதிப்பு 23.34 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மதிப்பீட்டின்படி 23.34 கோடி என்றாலும், இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் இயக்குனரான ராஜசேகரின் 11 இடங்களில் சொத்துக்களை வாங்கி இருப்பதும் அதன் மடிப்பு 8 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து அசையா சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வசம் வந்துள்ளது. தொடர்ந்து இந்த சொத்துக்கள் நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டு, அவை ஏலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலம் விடப்பட்டு கிடைக்கும் பணத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
சர்வதேச போலீசை நாடும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
 
ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இருந்து வந்த ராஜசேகர் மற்றும் மற்றொரு இயக்குனரான ராஜசேகரின் மனைவி உஷா ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளனர். தற்சமயம் இருவரும் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியை நாடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Embed widget