மேலும் அறிய
800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
திருப்பூரில் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

gutka_f
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள குடோன்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நெருப்பெரிச்சல் பகுதியில் சோதனை மேற்கொண்டதில் கெவின் பட்டேல் என்பவரது குடோனில் சுமார் 800 கிலோ அளவிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் ,குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது .

இதனையடுத்து காவல்துறையினர் 800 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் கெவின் பட்டேல் என்பவரை கைது செய்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் அவரிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

எங்கிருந்து குட்கா சப்ளையானது, யார் இவர்களுக்கு வினியோகம் செய்வது, அதற்கு வேறு நெட்வொர்க் எதுவும் செயல்படுகிறதா என்கிற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















