Crime : 7 வகுப்பு மாணவன் மீது கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய ஆசிரியர்.. பதைபதைக்கவைக்கும் அதிர்ச்சி தகவல்கள்
கர்நாடகாவில் இரண்டாம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியர் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியும், அங்கன்வாடி மையத்தில் 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் ஆசிரியை சூடு வைத்த சம்பவத்தாலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது ராய்ச்சூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது சன்டேகல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் 7வயது சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த பள்ளியில் நேற்று வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டு வயது நிரம்பிய 7 வயது சிறுவன் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்,
அப்போது, அந்த 7 வயது சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பதால் அவனுக்கு சொல்லத் தெரியாததால், தனது சீருடையிலே மலம் கழித்துள்ளான். வகுப்பிலே மாணவன் மலம் கழித்ததால் ஆசிரியர் ஆத்திரமடைந்துள்ளார். உடனே அவர் தனது அருகில் இருந்த சுடு தண்ணீரை எடுத்து மாணவன் மீது ஊற்றியுள்ளார்.
இதில், தண்ணீரின் வெப்பம் தாங்காத மாணவன் அலறி துடித்துள்ளான். இதையடுத்து, சக ஆசிரியர்களும், அந்த பகுதி மக்களும் அந்த சிறுவனை லிங்கசகுரு தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொதிக்கும் நீரை மாணவன் மீது ஆசிரியர் ஊற்றியதில் மாணவனுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்படவில்லை. தீக்காயமடைந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் மிரட்டல் விடுத்து வருவதால்தான் அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கத் தயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தைப் போலவே, கர்நாடகாவில் மற்றொரு கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதாவது. கர்நாடகாவின் துமகுருவில் அங்கன்வாடி மையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அங்கன்வாடி மையத்தில் ஏராளமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு 28 வயதான ராஷ்மி என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்துள்ளார்.
அங்கன்வாடி மையத்தில் இருந்த 3 வயது குழந்தை ஒன்று தனது டவுசரிலே சிறுநீர் கழித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஷ்மி அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். இதனால், அந்த குழந்தை வலியில் துடித்துள்ளது. தாயை இழந்த அந்த பிஞ்சு குழந்தைக்கு அங்கன்வாடி ஆசிரியை பிறப்புறுப்பில் சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து. ஆசிரியை ராஷ்மீது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு மாணவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றியும், 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு வைத்தும் ஆசிரியர்கள் கொடூரமாக செயல்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Crime: 18 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம் செய்யத்தூண்டிய 7 பேர்! ஷாக் சம்பவம்!
மேலும் படிக்க : படிக்க சொல்லி அடிக்கடி வற்புறுத்திய அப்பா.... தன்னை யாரோ கடத்தியதாக நாடகமாடிய மகன்