படிக்க சொல்லி அடிக்கடி வற்புறுத்திய அப்பா.... தன்னை யாரோ கடத்தியதாக நாடகமாடிய மகன்
புதுச்சேரியில் படிக்க சொல்லி அடிக்கடி வற்புறுத்தியதால் தன்னை யாரோ கடத்தி சென்றதாக நாடகம் ஆடிய 8 ஆம் வகுப்பு மாணவன்
புதுச்சேரியில் படிக்க சொல்லி வற்புறுத்தியதால் தன்னை கடத்திவிட்டதாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது 13 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மாலை சைக்கிளில் டியூசன் சென்டருக்கு சென்ற மாணவன், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றதாகவும், தற்போது இந்திராகாந்தி சிலை அருகே நின்று கொண்டு இருப்பதாகவும் தந்தைக்கு போன் செய்து தெரிவித்தார். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பெயரில் லாஸ்பேட்டை போலீசார், கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உடனடியாக போலீசார் இந்திராகாந்தி சிலைக்கு சென்று பார்த்த போது அங்கு நின்று கொண்டு இருந்த மாணவனை மீட்டு லாஸ்பேட்டை காவல்நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். மாணவனே கடத்தல் நாடகம் நடத்தியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை செய்ததில் படிக்க சொல்லி அப்பா திட்டியதால் டியூசனுக்கு செல்ல பிடிக்காமல், கடத்தல் நாடகத்தை மாணவன் செய்து இருப்பது தெரியவந்தது. மகன் நன்றாக படிக்க வேண்டும் என்று அவரை, தனியார் பள்ளியில் தந்தை சேர்த்து உள்ளார்.
#JUSTIN | படிக்க சொல்லி அடிக்கடி வற்புறுத்தியதால் தன்னை யாரோ கடத்தி சென்றதாக நாடகம் ஆடிய 8 ஆம் வகுப்பு மாணவன்https://t.co/wupaoCzH82 | #puducherry #Schools pic.twitter.com/9nEu7J6BkY
— ABP Nadu (@abpnadu) September 8, 2022
மேலும், நன்றாக படிக்க வேண்டும், முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்று கூறி அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவன், டியூசன் ஹோம்வொர்க் செய்யவில்லை. தனது சைக்கிளை டியூசன் சென்டரில் நிறுத்தி விட்டு பேருந்தில் ஏறி புதிய பேருந்து நிலையம் சென்று அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு அங்கிருந்து இந்திராகாந்தி சிலை சந்திப்புக்கு நடந்தே சென்று உள்ளார். அங்கிருந்த ஒருவரிடம் போன் வாங்கி தன்னை 4 பேர் கும்பல் கடத்தி சென்றதாக தந்தைக்கு போனில் தெரிவித்து உள்ளார். படிக்க சொல்லி அப்பா அடிக்கடி திட்டியதாகவும், டியூசன் வீட்டுப்பாடம் செய்யாததால் கடத்தபட்டதாக நாடகம் ஆடியதாகவும் மாணவன் போலீசாரிடம் தெரிவித்தார். பின்பு மாணவனின் பெற்றோர் மற்றும் டியூசன் ஆசிரியரை வரவழைத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா, காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் ஆகியோர் அறிவுரை வழங்கினர். பிள்ளைகளிடம் அன்பாகவும், பாசமாக இருக்க வேண்டும். படிக்க சொல்லி துன்புறத்த கூடாது அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்