மேலும் அறிய

பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

சுங்குவார்சத்திரத்தில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் ரூபாய் 3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கோவளவேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், தினேஷ் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதற்காக சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து ரூபாய் 3 லட்சம் எடுத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சுமதி திரையரங்கம் அருகே உள்ள தனது ஆடிட்டர் அலுவலகத்துக்கு செல்வதற்காக காரில் சென்றுள்ளார்.

அப்போது, காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்க்கும்போது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறிய தினேஷ் காரின் உள்ளே பார்த்தபோது, காரின் உள்ளே வைத்திருந்த ரூபாய் 3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

இதையடுத்து, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி

Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்

கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்

Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!

for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?

Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?

Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?

Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல்  பணிகள் தீவிரம்
கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget