மேலும் அறிய
Advertisement
Crime : சென்னை : கொரட்டூரில் கொலை திட்டம் தீட்டிய ரவுடிகள்.. பதுங்கி இருந்த 6 பேரில் மூவர் கைது..
கொரட்டூரில் கொலைத்திட்டம் தீட்டி பதுங்கி இருந்த ஆறு பேரில் மூன்று பேர் கைது. இரண்டு பட்டாகத்தி ஒரு வெல்டிங் இயந்திரம் ஒரு கட்டிங் மெஷின் ஆகியவை பறிமுதல். குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொரட்டூரில் கொலை உள்ளிட்ட சதி திட்டத்திற்கு திட்டம் தீட்டி வீட்டில் பதுங்கி இருந்த ஆறு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு பட்டாகத்தி ஒரு வெல்டிங் இயந்திரம் ஒரு கட்டிங் மெஷின் ஆகியவை பறிமுதல் செய்து குற்றவாளிகள் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெங்கையம்மன் கோவில் தெருவில் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த சரித்திரபதிவேடு குற்றவாளி அப்பன் ராஜ் வ/44 என்பவர் வீட்டில் கடந்த 1வாரமாக சதி திட்டத்திற்கு திட்டம் தீட்டி பதுங்கியிருந்த கும்பலை கொரட்டூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார், கொரட்டூரை சேர்ந்த ஆகாஷ் வ/20,வியாசர்பாடி அஜய் வ/20, பட்டரவாக்கம் நிஷாந்த் வ/20, ஆகியோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசாரை கண்டு தப்பியோடிய சங்கர் வ/18 என்பவர் உட்பட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர்களிடமிருந்து 2 பட்டா கத்தி 1 கிரைண்டிங் மிசின்,1 வெல்டிங் மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றகாவலுக்கு அனுப்பப்பட்டனர்.
நேற்று மாலை 5 மணிக்கு T3 கொரட்டூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு பொதுமக்கள் 100 காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த ரகசிய தகவலின் படி கொரட்டூர் கங்கையெம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற போது 6 நபர்கள் கஞ்சா பாதையில் பட்டா கத்தியை தீட்டிகொண்டிருந்ததாகவும். அதில் 3 நபர்கள் போலீசை பார்த்ததும் வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும் அதில் 3 பேர் மற்றும் 2 பட்டாக்கத்தி மற்றும் 1 கிரைன்டிங் மிஷின் 1வெல்டிங் மிஷின் ஆகியவற்றுடன் பிடித்து நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது. குற்றவாளிகள் 3 பேரும் History Sheeted : அப்பன் ராஜ் என்ற எதிரியின் வீட்டில் வைத்து கத்திகளை தீட்டிக் கொண்டிருந்தனர். அப்பன்ராஜ் கடந்த 03.12.21-ஆம் தேதி ஆகாஷ் பிரசாந்த் மணி ஆகியோரை வெட்டிய வழக்கில் ஜெயிலில் உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய தற்போது தலைமறைவாக உள்ள எதிரி சங்கர் மற்றும் 5 நபர்களுடன் கத்தியை தீட்டி கொண்டிருந்ததால் கொரட்டூரைச் சேர்ந்த எதிரி ஆகாஷ் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்தது முறியடிக்கப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை : பட்டா பெயர் மாற்றத்திற்காக அலைகழிக்கப்படும் பெண் கதறல்... வாட்ஸ் அப் குழுக்களில் வைரல்!
ஆவடியில் பட்டா பெயர் மாற்றத்திற்கு 2 ஆண்டாக அலைகழிக்க படுவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க குமுறும் வீடியோ ஆவடி தாலுகா அலுவலகத்தில் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், சமீப காலமாக பட்டா வழங்குதல்,பெயர் மாறுதல் தொடர்பான பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்தநிலையில் பட்டா தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அலைக்கழிக்கப்படுவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க பேசும் வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆவடி வட்டத்திற்குட்பட்ட வெள்ளானூர் கிராமத்தைச் சேர்ந்த சுசிலா என்பவர் தனது மாமியார் பெயரில் உள்ள ஒரு கிரவுண்ட் நிலத்தை பிரித்து அரை கிரவுண்டை தனது பெயருக்கு பெயர் மாறுதல் செய்து பட்டா வழங்க ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.வட்டாட்சி யர் அலுவலக அதிகாரிகளின் மெத்தன போக்கால் சுசிலா என்னும் தனது பெயரை மாற்றி சசிகலா என பதிந்து பட்டா வழங்கியுள்ளனர்,அதனை சுட்டிக்காட்டி கேட்டதற்கு மீண்டும் விண்ணபிக்கும்படி அலட்சியமாக பதில் அளிக்கின்றனர், என்றபோது தான் மீண்டும் விண்ணப்பித்திருந்த நிலையில் வட்டாட்சியர், கோட்டாட்சியர்,கிராம நிர்வாக அலுவலர் என கையொப்பம் வாங்கி வரும்படி கடந்த 2 ஆண்டுகளாக தன்னை அலைகழிகின்றனர் என வேதனை தெரிவிக்கும் சுசிலா,வட்டாட்சியர் அலட்சியத்தின் உச்சமாக ஏதேதோ காரணங்களை கூறி மீண்டும் புதியதாக மனு அளித்து வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவர் என அனைவரிடமும் கையெழுத்து பெற்று வந்து சமர்பித்தால் பட்டா தர முடியும் என துரத்துவதாக கண்ணீர் மல்க பேசியுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த பணிகள் தொடர்பாக அணுகினாலும் பணம் கொடுக்காமல் எதுவும் நடைபெறுவது இல்லை என கூறும் பொதுமக்கள் பணம் கொடுத்து இடைத்தரகர்கள் மூலம் அணுகினால் பணி உடனடியாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அவரது தொகுதியில் நடைபெறும் இதுபோன்ற பொதுமக்கள் அவதியுறும் நிலையை இதுவரை கண்டுகொள்வில்லை எனவும் இனியேனும் கவனித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion