10-ஆம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பால் உயிரிழப்பு.. இளைஞர் கைது.. போலி மருத்துவரிடம் தீவிர விசாரணை
தானிப்பாடி பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு மாணவியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்காவில் 10-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார் மாணவி. அவருடைய உறவினரான சேட்டு என்பவரின் மகன் முருகன் மாணவியை அடிக்கடி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு முருகன், அம்மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார் என தெரிந்துகொண்ட முருகன் மாணவிக்கு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். மாணவி மீண்டும் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இருவரும் மீண்டும் மாணவியுடன் முருகன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மாணவி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியதாக கூறப்படுகிறது.
கர்ப்பத்தை எப்படி கலைப்பது என்று திட்டமிட்ட முருகன் தனது உறவினரான பிரபு என்பவரின் உதவியுடன் மாணவியின் கருவை கலைப்பதற்காக ரெட்டியார் பாளையம் கிராமத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றுள்ளார். அங்கு ஜெயராஜ் மனைவி காந்தி வயது (65) என்பவரது உதவியுடன் மாணவிக்கு கருகலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைக்க முயற்சித்துள்ளனர். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரும் வழியில் மாணவி திடீரென மயங்கியுள்ளார். மாணவியை சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்தாகவும், மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தானிப்பாடி காவல் நிலையத்தில் தனது மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கொன்று விட்டதாகவும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எனது மகளின் உடலை பெற்று தரக்கோரியும் புகார் மனு அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தானிப்பாடி போலீசார் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான முருகன் என்ற இளைஞரையும், போக்சோ சட்டத்தில் கைது செய்தும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பிரபு என்ற நபரையும் கைது சிறையில் அடைத்தனர்.
கருக்கலைப்பு செய்த ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த போலி மருத்துவர் காந்தியிடம் நேற்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காந்தியின் கணவர் ஜெயராஜ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வந்துள்ளதாகவும், சிலநாட்கள் கழித்து சொந்த கிராமமான ரெட்டியார் பாளையத்தில் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.
திடீரென சில மாதங்களுக்கு முன்பு ஜெயராஜ் உயிரிந்துள்ளாராம். அதன் பிறகு காந்தி மருத்துவம் பார்த்து வந்துள்ளதும், இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளாரா என காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியான மருத்துவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்று மாணவி உயிரிழந்த சம்பவம் பகுதியில் வரும் சாேகத்தை ஏற்படுத்தி உள்ளது.