Womens Equality Day : ரோஷிணி.. கிரண் மஜூம்தார்.. ராதா வேம்பு.. டாப் பணக்காரப் பெண்கள் லிஸ்ட்
அர்ப்பணிப்பு மற்றும் அபார உழைப்பின் மூலம் அதிகபட்ச பொருளாதாரத்தை ஈட்டிய பெண்களின் பட்டியலை ஹூருன் வெளியிட்டுள்ளது.
கோடக் தனியார் வங்கி ஹுருன் சமீபத்தில் இந்தியாவின் முன்னணி பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டது. அர்ப்பணிப்பு மற்றும் அபார உழைப்பின் மூலம் அதிகபட்ச பொருளாதாரத்தை ஈட்டிய பெண்களின் பட்டியலை ஹூருன் வெளியிட்டுள்ளது.அந்தப் பட்டியல் இதோ...
ஹெச் சி எல் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மொத்த சொத்து மதிப்பு ரூ. 84,330 கோடியுடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோடக் தனியார் வங்கி ஹுரூன் முன்னணி பணக்கார பெண்களின் பட்டியலில் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஹெச்சிஎல் அவரது தலைமையில் ரூ.13,740 கோடி மதிப்பிலான பெரும் ஒப்பந்தத்தை முறியடித்தது.
பட்டியலின் இரண்டாவது இடத்தில் நய்கா நிறுவனர் மற்றும் சி இ ஓ ஃபால்குனி நாயர் தக்க வைத்துக்கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே தனது நிறுவனத்தின் மிக உயர்ந்த தொடக்க ஐபிஓ மூலம் வரலாற்றை உருவாக்கினார். இவரது நிகர மதிப்பு ரூ. 57,520 கோடி. அவர் உலகின் பத்தாவது பணக்கார பெண்மணி ஆவார்.
பட்டியலின் மூன்றாவது இடத்தில் பயோகான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் மஜும்தார் ஷா உள்ளார். இவரது மொத்த மதிப்பு இந்திய ரூபாய் 29,030 கோடி. இந்தியாவின் மிகப்பெரிய உயிர் மருந்து நிறுவனமான பயோகான் விரிவடைவதற்கு அவர் எப்போதும் காரணமாக இருந்துள்ளார். சமீபத்தில் இவர் நிறுவனம் 3 பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவில் வையாட்ரிஸ் பயோசிமிலர் என்கிற நிறுவனத்தை வாங்கியது.
View this post on Instagram
முன்னணி பணக்காரப் பெண்கள் பட்டியலில் நிலிமா மோடபர்தி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது நிகர மதிப்பு ரூபாய் 28,18 கோடி. திவியின் லேபரட்டரீஸ் மெட்டீரியல் சோர்சிங் மற்றும் கொள்முதல், கார்ப்பரேட் ஃபைனான்ஸ் மற்றும் முதலீட்டாளர் உறவுகளின் ஒவ்வொரு அங்கத்தையும் நிலிமா நிர்வகித்துள்ளார்.
ராதா வேம்பு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஜோஹோ கார்ப்பரேஷனில் அவர் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார். 26,260 கோடி ரூபாய் சொத்துக்களுடன், ஜோஹோவின் அனைத்து நிறுவன செயல்பாடுகளையும் ராதா கையாளுகிறார், 25 பேர் கொண்ட குழுவை வழிநடத்துகிறார் மற்றும் 45 தயாரிப்புகளை செயலாக்குகிறார்.
யுஎஸ்வியைச் சேர்ந்த லீனா காந்தி திவாரி, இந்தியாவின் ஆறாவது பணக்காரப் பெண்மணி. மும்பையைச் சேர்ந்த க்ளோபல் மெடிக்கல் மற்றும் பயோடெக்னாலஜி கார்ப்பரேஷனின் தலைவராக உள்ளார். பட்டியலின்படி, அவரது நிகர மதிப்பு, 24,280 கோடி ரூபாய். 2021 ஹுருன் இந்தியா பிலந்த்ரோபிஸ்ட் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
14,530 கோடி நிகர மதிப்புடன், தெர்மாக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அனு ஆகா, பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகைப் பொறுத்தவரை, அனு ஆகா இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான வணிகப் பெண்களில் ஒருவராக உள்ளார். இருப்பினும் அவர் தன்னை ஒரு சுறுசுறுப்பான பிலந்த்ரோபிஸ்ட்டாக அடையாளப்படுத்த விரும்புகிறார்.