மேலும் அறிய

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி, ஆங்கிலம் சரளமாக பேசவராத, கூச்ச சுபாவம் கொண்ட கவுதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக உருவெடுத்தது எப்படி?

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த துணி வியாபாரியின் மகனாக 1962-ஆம் ஆண்டு பிறந்த கவுதம் அதானி இன்று உலகின் டாப் 15 பணக்காரர்களின் ஒருநபராக உருவெடுத்து நிற்கிறார். மற்ற தொழிலதிபர்களை போல இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி அல்லது ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்துவிட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பை படித்த பின்னர் தொழில் வாழ்க்கைக்கு வந்தவர் அல்ல அதானி. தனது தொழில் வாழ்க்கைக்காக தனது பட்டப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய ரிஸ்க் டேக்கர்தான் கவுதம் அதானி.

அதானியின் சொத்தைக் கொண்டு தமிழ்நாட்டின் கடனை அடைக்கலாம் 

குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு வைர வியாபாரத் தொழிலில் நுழைந்த அதானியின் சொத்துமதிப்பு 5.66 லட்சம் கோடியாக உள்ளது. ஆசியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இரண்டாவது பெரிய தொழிலதிபராக உருவெடுத்துள்ள கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பான 5.66 லட்சம் கோடியை கொண்டு தமிழ்நாடு அரசு வாங்கி உள்ள 5.7 லட்சம் கோடி கடன்களை அடைக்க முடியும்.

வைர நிறுவனத்தில் வாழ்க்கையை தொடங்கிய அதானி 

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

1979-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பதின்ம வயதில், சொந்த ஊரான அகமதாபாத் நகரில் இருந்து வெளியேறி மும்பைக்கு இடம்பெயர்ந்த அதானி, வைர வணிக நிறுவனம் ஒன்றியில் பணிக்கு சேர்ந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சொந்தமாக வைரவியாபாரம் தொடங்கினார். 1981-ஆம் ஆண்டில் தனது சகோதரர் முன்ஷுக்பாய் அதானி தொடங்கிய பிளாஸ்டிக் தொழிற்சாலையை கவனித்துக் கொள்வதற்காக மீண்டும் அகமதாபாத் சென்ற கவுதம் அதானியின் பார்வை ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தை நோக்கி சென்றது. POLYVINYL CHLORIDE (PVC)-இறக்குமதி வணிகத்தில் அதானி ஈடுபட்ட நிலையில் 1985ஆம் ஆண்டில் அதானி எண்டர்பிரஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டில் இந்தியாவில் உலகமயம் அமல்படுத்தப்பட்டபிறகு அந்நிறுவனம், உலோகம், துணிவகைகள், விவசாய பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியில் கோலோச்ச தொடங்கியது.

சரளமாக ஆங்கிலம் பேச வராது

1995-ஆம் ஆண்டில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அரசின் ஒப்பந்தத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது கவுதம் அதானியின் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையாக உள்ளது. இதற்கு பிறகு இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள துறைமுகங்களையும், சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் கட்டுப்படுத்த தொடங்கிய அதானி குழுமம் இந்தியா துறைமுகங்களில் கையாளப்படும் மொத்த சரக்கு கையாள்வதில் 25 சதவீத சரக்குகளை கையாளும் மெகா நிறுவனமாக உருவெடுத்து நிற்கிறது.

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், ரியல் எஸ்டேட், விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம், நிதிசேவைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள நிறுவனமாக அதானி தனது நிறுவனத்தை கட்டமைத்துள்ளார். இவ்வளவு பெரிய தொழில் கட்டமைப்பை ஏற்படுத்திய அதானியால் சரளமாக ஆங்கிலத்தில் பேசவராது என்பது, அவர் கூச்ச சுபாவம் உடையவர் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் தகவலாக உள்ளது.

இரண்டு முறை உயிர் பிழைத்த அதானி

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

1997-ஆம் ஆண்டில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒன்றால் அகமதாபாத்தில் கவுதம் அதானி கடத்தப்பட்டார். ஒருநாள் வரை கடத்தி வைத்திருந்தவர்கள் அதானி தரப்பிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டே அவரை விடுத்தித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் நிகழ்வின்போது தாஜ் ஓட்டலில் விருந்தினராக தங்கி இருந்தவர் அதானி என்பது குறிப்பிடத்தக்கது. 

நரேந்திர மோடி உடனான நட்பு

நிலம், இயற்கை வளங்கள், அரசு ஒப்பந்தங்கள், அரசு உரிமங்கள்தான் இந்திய தொழிலதிபர்களின் பொருளாதார மூலங்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில், இந்த மூன்றையும் கையகப்படுத்தி உள்ள நபராக அதானி உருவெடுத்துள்ளார். அவரின் இத்தகைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது நட்புதான் என்று தற்போதுவரை அரசியல்வாதிகள் அதானி மீது முன்வைக்கும் முக்கிய விமர்சனமாக உள்ளது. 2001-ஆம் ஆண்டில் குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகுதான் அதானியின் தொழில் வளர்ச்சி அதிகமானதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

அப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு அம்மாநில தொழில் வளர்ச்சிகாக எடுக்கப்பட்ட முடிவுகளில் அதானி குழுமத்திற்கு சாதகமாக எடுக்கப்பட்டதாக இன்று வரை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா மதக்கலவரம் தொடர்பாக அன்றைய முதல்வர் நரேந்திரமோடி கடும் விமர்சனத்திற்கு ஆளானபோது கூட, அதானி தன் மோடி ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

மோடிக்காக தனது விமானத்தை கொடுத்த அதானி 

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில்தான் நாடு முழுவதும் 20 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணித்து 150-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதாக அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதானி போர்ட்ஸ் அண்ட் எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்கு குஜராத் துறைமுக விரிவாக்கத்திற்காக ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்களை மலிவு விலைக்கு அரசு குத்தகைக்கு வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் தற்போது வரை முன்வைக்கப்படுகின்றன.

மோடி பிரதமர் ஆன பின் அசூர வளர்ச்சி கண்ட அதானி

2020 ஜி20 மாநாட்டில் நரேந்திரமோடியுடன் ஆஸ்திரேலியா சென்ற அதானி அந்நாட்டின் கிரேட் ஃகெரியர் ரிஃப் பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான அனுமதியையும் அதானி பெற்றார். அதானி குழுமம் நிலக்கரி எடுப்பதற்காக ஸ்டேட் பாங்ஃ ஆஃப் இந்தியா ஒரு பில்லியன் டாலர் கடனை கொடுத்திருந்தது. 1994ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஒரு பங்கின் விலை  150 ரூபாயாக இருந்த நிலையில் மார்ச் 2020ஆம் ஆண்டில் 75000 ரூபாயாக உள்ளதாக அதானி குழும ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றம் தான் அதானியின் சொத்து மதிப்பு உயர மிக முக்கிய காரணமாக உள்ளது.

பங்கு சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவு

இந்த நிலையில் நேற்றைய பங்குவர்த்தகத்தின் முடிவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் 6 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி கீரின் எனர்ஜி நிறுவனம் மட்டும் 0.68% வளர்ச்சியை பெற்று 1226 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5.7% சரிந்து 1,510 ரூபாய்க்கும் அதானி போர்ஸ் & எஸ்.இ.இசட் நிறுவனம் 9.2% சரிந்து 762 ரூபாய்க்கும் விற்றது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. "அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (Foreign Institutional Investors) டெபாசிட்டரி கணக்குகளை முடக்கிவிட்டார்கள் என்ற புரளியே இந்த சரிவுக்கு காரணமாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Embed widget