Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
Next Successor of Ratan Tata: மூவரில் மிகவும் இளையவரான மாயா டாடாவே ரத்தன் டாடாவின் வாரிசாகத் தேர்வு செய்யப்படுவார் என்று தொழில் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மாபெரும் தொழிலதிபரும் ஆகச்சிறந்த மனிதருமான ரத்தன் டாட்டா நேற்று நள்ளிரவு காலமானார். 86 வயதான இவர், வயது மூப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தன்னுடைய முதல் காதல் முறிந்தபிறகு, சில அன்பு பூத்திருப்பினும் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. தன் சாதுர்யத்தால் டாடா நிறுவனங்களைப் பல்கிப்பெருக வைத்த ரத்தன் டாடாவுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் இருக்கின்றன. எனினும் இதில் பெரும் பகுதியை அறக்கட்டளைகளுக்கு அவர் எழுதி வைத்ததால், 3,800 கோடி ரூபாய் ரத்தனின் சொத்து மதிப்பாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரத்தனின் மறைவுக்குப் பிறகு டாடா என்னும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளப்போவது யார்? பார்க்கலாம்.
நெவில் டாடா, லியா டாடா, மாயா டாடா
ரத்தன் டாடாவின் சித்தி மகன் நோயல் டாடா. இவருக்கு நெவில் டாடா, லியா டாடா, மாயா டாடா ஆகிய மூன்று வாரிசுகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே 2022ஆம் ஆண்டு டாடா குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு தலைமைப் பொறுப்புகளில் அமர்ந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் மூவரில் மிகவும் இளையவரான மாயா டாடாவே ரத்தன் டாடாவின் வாரிசாகத் தேர்வு செய்யப்படுவார் என்று தொழில் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மாயா டாடா பின்னணி (Maya Tata)
பேயிஸ் பிசினஸ் பள்ளி, வார்விக் பல்கலைக்கழகம் ஆகிய இரு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும் படித்தவர் மாயா டாடா. 34 வயதான இவர் டாடா ஆப்பர்சுனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் டாடா டிஜிட்டலில் பணியாற்றி உள்ளார். Tata Neu என்னும் செயலியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். டாடா குழுமத்தின் டிஜிட்டல் முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தவர் மாயா. வலிமையான தலைமைத்துவத்தையும் திட்டமிடலையும் தன் இளம் வயதிலேயே நிரூபித்துள்ளார்.
லியா டாடா
மாயாவின் சகோதரியான லியா டாடா, டாடாவின் இந்திய ஓட்டல் நிறுவனம் மற்றும் தாஜ் ஓட்டல்களை நிர்வகித்து வருகிறார். இவற்றை உலகளாவிய அளவுக்கு எடுத்துச் சென்றதில் லியா பெரும் பங்கு வகித்துள்ளார். இவருக்கு வயது 39.
நெவில் டாடா
அதேபோல நோயல் டாடாவின் ஒரே மகனான நெவில் டாடா (Neville Tata) ஸ்டார் பஜாரைக் கவனித்துக் கொள்கிறார். சில்லறை வணிகத்தை நிர்வகிப்பதில் அவரது தலைமைத் திறன் மற்றும் வணிக புத்திசாலித்தனம் ரத்தன் டாடாவால் பாராட்டப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

