மேலும் அறிய

Twitter : எலன் மஸ்க்கால் சரியும் வருமானம்.. கலக்கத்தில் ட்விட்டர் நிறுவனம்.. என்னதான் நடந்தது?

பயனாளர்கள் எண்ணிக்கை ஏறியிருந்தாலும் வருவாயில் சரிவை சந்தித்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருவாய் இழப்பு:

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் சமீப காலமாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய போதிலிருந்தே ஒரு நிலைத்தன்மையின்மை நிலவுகிறது. ஏற்கனவே அதன் வருவாய் 1.18 பில்லியன் டாலராக குறைந்த நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 270 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

Twitter : எலன் மஸ்க்கால் சரியும் வருமானம்..  கலக்கத்தில் ட்விட்டர் நிறுவனம்.. என்னதான் நடந்தது?

மஸ்க்கால் சரியும் வருவாய்:

கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், அந்த முடிவை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கானது வரும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விவகாரங்கள் அதன் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் மூலமாக கிடைத்துள்ள வருவாய் 2% மட்டுமே உயர்ந்து 1.08 பில்லியனை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த வருவாய் 1.22 பில்லியனாக இருக்கும் என்று வால் ஸ்ட்ரீட் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த ஆஅண்டின் இரண்டாம் காலாண்டின் வருவாய் சப்ஸ்க்ரிப்ஸன்கள் எல்லாவற்றையும் சேர்த்து 1.18 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஈட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.19 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்தது ட்விட்டர் நிறுவனம்.  மொத்த வருவாய் இந்த காலாண்டில் 1.32 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது.

Twitter : எலன் மஸ்க்கால் சரியும் வருமானம்..  கலக்கத்தில் ட்விட்டர் நிறுவனம்.. என்னதான் நடந்தது?

சமாதானம் பேசும் அதிகாரிகள்:

ட்விட்டர் நிறுவன விளம்பரப்பிரிவு அதிகாரிகள் தங்கள் விளம்பரதாரர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கின்றனர். எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கின் போக்கு எப்படிச் சென்றாலும், எப்படி முடிவடைந்தாலும் அதன் வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதைய நிலையில் ட்விட்டரின் ஒரு பங்கின் விலை 38.90 டாலர்களாக இருக்கின்றது. இந்த சூழல் காரணமாக சுமார் 270 மில்லியன் டாலர்கள் வருவாயை இழந்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது ட்விட்டரின் ஒரு பங்கில் 35 செண்ட்களை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 65.6 மில்லியன் டாலர்களை லாபமாக ஈட்டியிருந்த நிலையில் இந்த ஆண்டு சரிவை சந்தித்திருக்கிறது.

Twitter : எலன் மஸ்க்கால் சரியும் வருமானம்..  கலக்கத்தில் ட்விட்டர் நிறுவனம்.. என்னதான் நடந்தது?

பயனாளர்கள் உயர்ந்தாலும் வருவாய் சரிவு:

இந்த காலகட்டத்தில் ட்விட்டர் பயனாளர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 16% உயர்வை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் 237.8 மில்லியன் பயனாளர்கள் ட்விட்டரை ஆக்டிவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

எலான் மஸ்க் ட்விட்டரை தொடர்ந்து இகழ்ந்தது உள்ளிட்ட காரணங்களால் ட்விட்டரினுள் நிலைத்தன்மையின்மையை உருவாக்கியிருக்கிறது. இது ட்விட்டரின் வணிகம், பணியாளர்கள் மற்றும் பங்கின் விலை ஆகியவற்றை பாதித்துள்ளது என்று நீதிமன்றத்தில் வாதம் செய்ததையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி

RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்

CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?

Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு

ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!

Embed widget