புதிய நிதியாண்டு தொடக்கம்.. விலை உயரப்போகும் பொருட்கள் என்ன? விலை குறையும் பொருட்கள் என்ன? பட்டியல் இதோ..
இந்த நிதியாண்டில் விலை உயர்ந்தும், விலை குறைந்தும் விற்பனை செய்யப்படும் பொருட்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
2023 – 2024 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி திருத்தம் செய்யப்பட்டது. இது குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆண்டுதோறும் மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டின் இறுதி நாளாக அனுசரிக்கப்பட்டுகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் நிதிஆண்டு இறுதி வேலைகளை மேற்கொள்ள இருப்பதால் இன்று வங்கிகள் செயல்படாது. இதில் முந்தைய நிதியாண்டின் கணக்குகள், இருப்புநிலைகள் மற்றும் பிற நிதிநிலை அறிக்கைகள் ஆகியவை அடங்கும்.
இந்த நிதியாண்டில் சில பொருட்களின் வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் இன்று (ஏப்ரல் 1ஆம் ) முதல் ஒரு சில பொருட்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படும். அதே சமயத்தில் வரி திருத்தத்தின் காரணமாக ஒரு சில பொருட்களின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் விலை உயரப்போகும் பொருட்களின் பற்றி பார்க்கலாம்:
தங்க நகைகள்
சிகரெட்
வெள்ளி பாத்திரங்கள்
பிளாட்டினம்
சமையல் அறையில் பயன்படுத்தப்படும் மின்சார சிம்னி
உயர் ரக மின்சாதன பொருட்கள்
பிளாஸ்டிக் பொருட்கள்
வைட்டமின்கள்
மிதிவண்டிகள்
மின்சார வாகனங்கள்
மேலும் குறிப்பிட்ட சிகரெட்டுகளுக்கான சுங்க வரி 16 சதவீதம் அதிகரிப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதையடுத்து குறிப்பிட்ட சிகெரெட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்:
இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைக்காட்சிகள், மொபைல் போன்கள், லித்தியம் அயன் பேட்டரி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்கள், கேமரா லென்ஸ், பொம்மைகள், சைக்கிள்கள், ஆய்வகங்களில் வளர்க்கப்படும் வைர விதைகளின் விலை சற்று குறையும். அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இண்ட ஆண்டு குறைவாக இருக்கும்.
இன்று முதல் தொலைக்காட்சிகளின் விலை சற்று குறையும் ஏனெனில் செல் டி.விக்கான பேனல் பகுதிகளின் சுங்க வரி 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவற்றை தவிர கைபேசி, கேமரா லென்ஸ், ஆடைகள், பெருங்காயம், கோக்கோ பீன்ஸ், உறையவைக்கப்பட்ட கணவாய் மீன்கள், உறையவைக்கப்பட்ட மட்டிகள், வைரங்கள், பெட்ரோலிய பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயணங்கள் ஆகிய பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள் தினசரி விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதுவரை இல்லாத அளவு தங்கம் புதிய உச்சம் அடைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேப்பி நியூஸ் மக்களே.. சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?