Bank Holidays : நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா..?
குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு திருவிழாக்கள் காரணமாக வங்கிகளுக்கு அந்த மாநிலங்களில் மட்டுமே ஒரு சில நாட்கள் விடுமுறையாக வருகிறது.
கடந்த மாதத்தில் வங்கிகள் 21 நாட்கள் விடுமுறையில் இருந்த காரணத்தால் பலர் தங்கள் வங்கி தொடர்பான வேலைகளை முடிக்காமல் வைத்திருந்திருக்கலாம். ஆனால் இந்த மாதம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி செல்லலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
விடுமுறையிலேயே கழிந்த இரு மாதங்கள்
செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்களுமே நிறைய பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விடுமுறைகள், தேசிய விடுமுறைகள் காரணமாக வங்கிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அக்டோபர் மாதம் ஆயுத பூஜை, தீபாவளி என இரு பெரும் பண்டிகைகள் வந்ததால் அந்த மாதமே விடுமுறையில் கழிந்து விட்டது.
தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் மொத்தமாக 21 நாட்கள் இந்த மாத்தில் வங்கிகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி இந்த மாதமே வந்துவிட்ட காரணத்தால் நவம்பரில் பெரிதாக பண்டிகைகள் ஏதும் இல்லை. இந்த நிலையில் மொத்தமே 10 நாட்கள் மட்டும் தான் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 10 நாட்களுக்குள்தான் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளும் அடங்குகின்றன.
தேசிய விடுமுறையே இல்லை
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் சனி மற்றும் ஞாயிறு 6 நாள் தவிர வேறு எந்த விடுமுறையும் தேசிய அளவில் கிடையாது. குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு திருவிழாக்கள் காரணமாக அந்த மாநிலங்களில் மட்டுமே ஒரு சில நாட்கள் விடுமுறையாக வருகிறது. எனவே வங்கிகள் அனைத்தும் மூடப்படும் தேசிய விடுமுறையாக நவம்பர் மாதத்தில் எதுவுமே இல்லை என்பது முக்கியமான செய்தியாகும்.
தொடர்புடைய செய்திகள்: சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - திடீரென அறிவித்த கருணாஸ்..! நடந்தது என்ன..?
தமிழ்நாடு விடுமுறைகள்
இப்போது நவம்பர் மாதம் எந்தெந்த நாட்களில் தமிழ்நாட்டில் வங்கிகள் இயங்காது என்பதை பற்றிய முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.
நவம்பர் 6: ஞாயிறு விடுமுறை
நவம்பர் 12: இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
நவம்பர் 13: ஞாயிறு விடுமுறை
நவம்பர் 20: ஞாயிறு விடுமுறை
நவம்பர் 26: நான்காவது சனிக்கிழமை விடுமுறை
நவம்பர் 27: ஞாயிறு விடுமுறை
மற்ற மாநிலங்கள்
மற்ற மாநிலங்களில் சிலவற்றுக்கு சிறப்பு பண்டிகை கால விடுமுறை கிடைக்கின்றது. அவர்களுக்கும் இந்த சனி, ஞாயிறு விடுமுறைகள் இதே போல பொருந்தும்.
நவம்பர் 1: கன்னட ராஜ்யோத்சவா/குட். பெங்களூரு மற்றும் இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 8: குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா. இந்த நாளில் ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன் மற்றும் ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 11: கனகதாச ஜெயந்தி/வாங்கல விழா. இந்த நாளில் பெங்களூரு, இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.
நவம்பர் 23: செங் குட்ஸ்னெம். ஷில்லாங் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை