மேலும் அறிய

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,029 கோடியில் இருந்து ரூ.1,072 கோடியாக உயர்வு

வங்கியின் நிகர லாபம் ரூ.1,029 கோடியில் இருந்து, ரூ.1,072 கோடியாக உயர்ந்துள்ளது. இது வங்கியின் 100 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச நிதியாண்டு நிகர லாபம் ஆகும்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.1,072கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 31.03.2024 அன்று நிறைவடைந்த நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வர்த்தகம் ₹85,348 கோடியிலிருந்து ₹89,485 கோடியாக அதிகரித்துள்ளது. CASA ₹13,736 கோடியிலிருந்து ₹14,676 கோடியாக அதிகரித்துள்ளது. பங்குகளின் புத்தக மதிப்பு ரூ. 438 லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. நிகர இலாபம் ரூ.1,029 கோடியிலிருந்து ரூ.1,072 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருமானம் ₹4,081 கோடியிலிருந்து ₹4,848 கோடியாக மேம்பட்டுள்ளது. மொத்த வருமானம் ₹4,710 கோடியிலிருந்து ₹5,493 கோடியாக உயர்ந்துள்ளது. RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) கடன் தொகை 87 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த கடன் தொகையில் SMA ஆனது 6.51% இலிருந்து 3.97% ஆக குறைந்துள்ளது. வலியுறுத்தப்பட்ட சொத்துகளின் (Stressed Asset) விகிதம் 3.18% Y-o-Y இலிருந்து 2.70% ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,029 கோடியில் இருந்து ரூ.1,072 கோடியாக உயர்வு

CASA ஆனது, ₹13,736 கோடியிலிருந்து ₹940 கோடி அதிகரித்து 31 மார்ச் 2024 இல் ₹14,676 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வைப்புநிதி ரூ. 49,515 கோடியாக உயர்ந்துள்ளது. (கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ. 47,766 கோடியாக இருந்தது) வங்கியின் மொத்த கடன் தொகை ரூ. 39,970 கோடியாக உயர்ந்து, 6.35% வளர்ச்சியடைந்துள்ளது. நிகர இலாபம் 31.03.2024 அன்று ரூ. 1,072 கோடியாக உயர்ந்துள்ளது. இது 31.03.2023 அன்று முடிவடைந்த கடந்த ஆண்டின் ரூ.1,029 கோடிகளில் இருந்து, 4.18 % வளர்ச்சியடைந்துள்ளது. நிகர வட்டி வருமானம் 31.03.2024 அன்று 2.72 % வளர்ச்சியடைந்து ரூ. 2,151 கோடியாக உயர்ந்துள்ளது (31.03.2023 அன்று ரூ. 2,094 கோடியாக இருந்தது). சொத்துகள் மீதான வருமான விகிதம் (Return on Asset) 1.84 சதவிகிதமாகவும், பங்குகளின் மீதான வருமான விகிதம் (Return on Equity) 14.44 சதவிகிதமாகவும் உள்ளது. (கடந்த ஆண்டு முறையே 1.97% மற்றும் 16.78 % சதவிகிதமாகும்). வங்கியின் நிகர மதிப்பு (Net worth) ரூ. 6,928 கோடியிலுருந்து 14.33 சதவிகிதம் வளர்ச்சியடைந்து ரூ. 7,921 கோடியாக உயர்ந்துள்ளது.மொத்த வராக்கடன், வங்கியின் மொத்த கடன் தொகையில் 1.44 சதவிகிதமாகவும், நிகர வராக்கடன் 0.85 சதவிகிதமாகவும் உள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,029 கோடியில் இருந்து ரூ.1,072 கோடியாக உயர்வு

நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு முந்தைய காலாண்டை விட 5.85% வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த வைப்பு நிதி முந்தைய காலாண்டை(Q3FY24) விட 5.80% வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் Q4FY23 ஒப்பிடுகையில் 3.66% வளர்ச்சியைக் கண்டுள்ளது. Q4FY24 காலாண்டில் வங்கி வழங்கிய கடன் முந்தைய காலாண்டை விட(Q3FY24) 4.13% வளர்ச்சி அடைந்துள்ளது, மற்றும் Q4FY23 உடன் ஒப்பிடுகையில் 6.35% வளர்ச்சியை எட்டியுள்ளது. Q4FY24 காலாண்டில் நிகர வட்டி வருமானம் Q4FY23 உடன் ஒப்பிடுகையில் 5.59% வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஈவுத்தொகை (Dividend) பரிந்துரை 2023-24 நிதியாண்டில், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 2023- 24 ஆம் நிதியாண்டில், தலா ரூ.10 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.10/- (100%) இறுதி ஈவுத்தொகை செலுத்த வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,029 கோடியில் இருந்து ரூ.1,072 கோடியாக உயர்வு

இந்த நிதியாண்டில் (2023-24), 22 புதிய கிளைகள் துவங்கப்பட்டன. மேலும், 2023-24ஆம் நிதியாண்டில் இன்னும் 50 புதிய கிளைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளோம். வளர்ந்து வரும் MSME சந்தை வணிகத்தை ஈர்க்க, MSME கடன் செயலாக்க மையம் அகமதாபாத், பெங்களுரு, சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், மதுரை, மும்பை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் சேலத்தில் துவக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Richest Lok Sabha Members: 18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Richest Lok Sabha Members: 18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும்  நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும் நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?
ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி என்ன?
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Embed widget