SuryaDev TMT : துருப்பிடிக்காத எப்.இ.550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகளை அறிமுகப்படுத்துகிறது, சூர்யதேவ்!
சூர்யதேவ் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகள் அனைத்து வகையான தனிமங்களுக்கு எதிரான கவசமாக செயல்படுகிறது.
சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர் (Suryadev Alloys and Power) நிறுவனம் இந்திய உருக்கு சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், தமிழ்நாட்டில் பிரதான நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனம் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. (Fe550D CRS TMT) கம்பிகளை அறிமுகம் செய்துள்ளது. இது துருப்பிடிக்காதத்தன்மை கொண்டது. சூர்யதேவ் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகள் உயர் தரத்திலான இரும்புத் தாதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனுடன் சரியான விகிதத்தில் தாமிரம், குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியவை சேர்க்கப்பட்டு துருப்பிடிக்காத வகையில் உருவாக்கப்படுகிறது.
கடலோர நகரங்களில் உப்பு நிறைந்த கடல் காற்றின் இடைவிடாத தாக்குதலிலிருந்தும் உள்நாட்டில் தொழில்துறை மாசுக்களிலிருந்தும், இந்தியாவில் நிலவும் பலதரப்பட்ட தட்ப வெப்ப நிலைகளையும் தாக்குப்பிடிக்கும் உருக்கைத் தயாரிப்பது மிகவும் சவாலானது. அதுவும் துருப்பிடிக்காத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த பிரச்னை நாடு முழுவதிலும் நிலவுகிறது. இதை சமாளிக்க இந்தியப் பொருளாதாரம் அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுதோறும் 3 முதல் 4 சதவீதம் வரை செலவிட வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல் பகுதி இல்லாத பிராந்தியங்கள் தொழில்துறை மாசுக்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய மாசுக்கள் துருப்பிடிக்க வழிவகுப்பதோடு கட்டுமான சூர்யதேவ் நிறுவனம் துருப்பிடித்தலைத் தடுக்கும் முயற்சியில் இடையுறாது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை கடைப்பிடிக்கிறது. இதன் வெளிப்படாக வந்துள்ள இந்தக் கம்பிகள், கட்டிடத்தின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதோடு, சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் தாக்குப்பிடிக்கிறது. இதனால் அடிக்கடி பழுது ஏற்படுவது அல்லது மாற்றங்கள் செய்வது குறைகிறது.
சூர்யதேவ் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகள்:
சூர்யதேவ் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகள் அனைத்து வகையான தனிமங்களுக்கு எதிரான கவசமாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் புதிய அறிமுகமான கம்பிகள், இதுவரை இத்துறை வகுத்துள்ள தரத்தை மறுவரையறை செய்வதாக உள்ளது. அத்துடன் கட்டுமானத்திற்கான சிறந்த நிலையான அணுகுமுறையை அளிப்பதாகவும், வரும் தலைமுறையினருக்கு நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்வதாகவும் விளங்குகிறது.
2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர் நிறுவனம் இந்திய உருக்கு சந்தையில் தரமான தயாரிப்பு மற்றும் புதுமைகளைப் புகுத்தி முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 6 லட்சம் டன்னாகும். கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள சூர்யதேவ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உருக்கு ஆலை இந்நிறுவனத்தின் பொறுப்புணர்வுக்கு மிகச் சிறந்த னத்தின் ஸ்திரத்தன்மையில் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வலுவிழக்கச் செய்கின்றன.
சூர்யதேவ் நிறுவனம் துருப்பிடித்தலைத் தடுக்கும் முயற்சியில் இடையறாது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை கடைப்பிடிக்கிறது. இதன் வெளிப்படாக வந்துள்ள இந்தக் கம்பிகள், கட்டிடத்தின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதோடு, சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் தாக்குப்பிடிக்கிறது. இதனால் அடிக்கடி பழுது ஏற்படுவது அல்லது மாற்றங்கள் செய்வது குறைகிறது.
சூர்யதேவ் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகள் அனைத்து வகையான தனிமங்களுக்கு எதிரான கவசமாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் புதிய அறிமுகமான கம்பிகள், இதுவரை இத்துறை வகுத்துள்ள தரத்தை மறுவரையறை செய்வதாக உள்ளது. அத்துடன் கட்டுமானத்திற்கான சிறந்த நிலையான அணுகுமுறையை அளிப்பதாகவும், வரும் தலைமுறையினருக்கு நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்வதாகவும் விளங்குகிறது.
2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர் நிறுவனம் இந்திய உருக்கு சந்தையில் தரமான தயாரிப்பு மற்றும் புதுமைகளைப் புகுத்தி முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 6 லட்சம் டன்னாகும். கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள சூர்யதேவ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உருக்கு ஆலை இந்நிறுவனத்தின் பொறுப்புணர்வுக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். அதிகரித்து வரும் உருக்கு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல தரப்பட்ட உருக்கு தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.
வெற்றியின் பின்னணி:
இந்நிறுவனம் நிலையான தரத்தில் கவனம் செலுத்துகிறது. இதனால் ஸ்திரமான வளர்ச்சியை சீராக எட்டி வருகிறது. இதன் கழிவு வெப்ப மீட்பு உலை (Waste Heat Recovery Boiler) மின்னுற்பத்தி நிலையம் டி.ஆர்.ஐ. ஆலையில் எஞ்சிய வெப்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் கணிசமாகக் குறைந்துள்ளது. சூர்யதேவ் நிறுவனம் இவை தவிர மிிகவும் முன்னோடி தொழில் நுட்பத்தை இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்று கரியமில வாயு வெளியேற்றம் இல்லாமல் உருக்கு தயாரிக்கும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது.
சூர்யதேவின் சிறப்பான செயல்பாடு மற்றும் மேம்பட்ட தரமான பொருள் தயாரிப்பு காரணமாக ஐ.எஸ்.ஓ தர மேலாண்மை சான்றிதழ், (ஐ.எஸ்.ஓ. 9001), சுற்றுச் சூழல் நிர்வாகத்துக்கான சான்றிதழ் (ஐ.எஸ்.ஓ. 14001) மற்றும் தொழில் சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கான சான்றிதழ் (ஐ.எஸ்.ஓ. 45000) ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இந்த தரச் சான்றுகள் அனைத்துமே நிறுவனம் தரமான பொருள்களை உற்பத்தி செய்கிறது என்பதோடு பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமான பணி புரியும் சூழலை தனது பணியாளர்களுக்கு அளித்துள்ளது என்பதையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. மேலும் நிதி ஸ்திரத்தன்மை, கடனை திரும்ப செலுத்துவதில் சூர்யதேவ் நிறுவ நம் மிகச் சிறப்பான கேர் ஏ2 (CARE A2) சான்றை குறுகிய கால வங்கிக் கடன் திரும்ப செலுத்துவதற்காகவும், நீண்ட கால கடனை திரும்ப செலுத்துவதில் கேர்-ஏ (CARE A) சான்றிதழையும் இந்நிறுவனம் பெற்றுள்ளதிலிருந்தே அதன் பொறுப்புணர்வை உணரலாம்.
சென்னை மெட்ரோ ரயில், பெங்களூர்-சென்னை விரைவுச் சாலை, சென்னை வெளி வட்டச் சாலை மற்றும் சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச் சாலை போன்ற முக்கிய உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கு தனது பங்களிப்பின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சூர்யதேவ் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.
இந்நிறுவனத்தின் வெற்றியின் பின்னணியில் மிகவும் வலிமையான விநியோகஸ்தர்கள் ஒருங்கிணைப்பு அதாவது 500 அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தென்னிந்தியாவில் உள்ளது, இந்நிறுவனத்துக்கு மிகப் பெரிய சொத்தாகும். இவர்களுடன் 2,000 திறன்மிகு பணியாளர்களடங்கிய குழு செயல்படுகிறது. நிறுவனத்தின் கலாசாரத்தில் வேரூன்றியிருக்கும் புதுமை மற்றும் சிறப்பம்சங்கள் சூர்யதேவ் நிறுவனத்தை முன்னணியில் வைத்திருக்கிறது. இதுவே தொடர்ந்து முன்னிலை வகிக்கவும் சந்தையில் போட்டியை எதிர்கொள்ளவும் வழிவகுக்கிறது.