Tax Minerals: ”கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு” ; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
Tax Minerals: கனிம வளங்களில் மாநிலங்கள் உரிமைக்கு ஆதரவாக 9 நீதிபதிகளில் 8 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
கனிம வளங்கள் மீது வரி விதிப்பதற்கான விவகாரத்தில் மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பது குறித்ததான வழக்கை உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு விசாரித்த நிலையில், மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளின் உரிமைகள் மீதான முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
வழக்கு:
கனிம வளங்கள் மீதான வரி விதிப்பு குறித்து மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான முரண்பாடு குறித்தான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்டு அமர்வு விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் 9-இல் 8 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பு வழங்கினர். 1 நீதிபதி மட்டும் எதிராக தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு:
இதையடுத்து, பெரும்பான்மையான நீதிபதிகள் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என ஆதரவளித்ததால், மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பானது.
இந்த தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, கனிம வளங்களுக்கு நாடாளுமன்றம் வரிவிதிக்க அதிகாரம் இல்லை என்றும், ராயல்டி என்பது வரி இல்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.