SC On Promotion: ஊழியரின் பதவி உயர்வை கருத்தில் கொள்ளாதது அடிப்படை உரிமையை மீறும் செயல் - உச்சநீதிமன்றம் அதிரடி
SC On promotion: ஊழியரின் பதவி உயர்வை கருத்தில் கொள்ளாதது அடிப்படை உரிமையை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
SC On Fundamendal Right: பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படும் உரிமையை சட்டப்பூர்வ உரிமையாக மட்டும் கருதாமல், அடிப்படை உரிமையாகvum கருதுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு அடிப்படை உரிமை - உச்சநீதிமன்றம்:
தகுதிக்கு உட்பட்டு ஊழியரின் பதவி உயர்வு குறித்து பரிசீலிக்கப்படுவது அவர்களது உரிமை என்றும், பதவி உயர்வுக்கு பணியாளரை பரிசீலிக்கத் தவறுவது அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படும் செயல் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படும் உரிமையை நீதிமன்றங்கள் சட்டப்பூர்வ உரிமையாக மட்டும் கருதாமல் அடிப்படை உரிமையாகக் கருதுகின்றன. இருப்பினும், பதவி உயர்வு வழங்க நீதிமன்றத்திற்கு அடிப்படை உரிமை இல்லை என்றும் விளக்கமளித்தனர்.
வழக்கு விவரம் என்ன?
பீகார் மின்சாரத்துறையில் துணைச் செயலாளராக உள்ள தரம்தேவ் தாஸ். இவருக்கு கடந்த 2003ம் ஆண்டு இணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “கடந்த 1997ம் ஆண்டே பதவி உயர்வு பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் தான் எட்டிவிட்டதாகவும், ஆனால் பதவி உயர்வு வழங்கப்படவில்லை” என்றும்” தரம்தேவ் தாஸ் குற்றம்சாட்டி இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 1997ம் ஆண்டு முதலே அவரது பதவி உயர்வை அமலுக்கு கொண்டுவர அறிவுறுத்தியது. அதனை எதிர்த்து பீகார் மின்சாரத்துறை மேல்முறையீடு செய்த நிலையில், பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் சொன்னது என்ன?
விசாரணையின் போது, ”முன்னாள் பீகார் பிரிக்கப்பட்ட பிறகு இணைச் செயலாளர் பதவி ஆறிலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டது. கால அளவு அளவுகோல் இயற்கையில் ஒரு கோப்பகமாக மட்டுமே இருந்தது” என பீகார் மின்சாரத்துறை சார்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பில், “உண்மையான காலியிடம் ஏற்படும் போதுதான், பிரதிவாதிக்கு துரிதப்படுத்தப்பட்ட பதவி உயர்வின் பலன் வழங்கப்பட்டது. அதுவும் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையின் மூலம் செல்லும். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எந்தவொரு கற்பனையினாலும் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான உரிமையை தனி உரிமையாகக் கருத முடியாது. குறைந்தபட்ச தகுதிச் சேவையை முடித்ததால் மட்டுமே அடுத்த உயர் பதவிக்கு பதவி உயர்வு பெறுவதற்கு எந்த ஒரு பணியாளரும் கோரிக்கை வைக்க முடியாது. அத்தகைய தீர்மானத்தின் விளக்கம் தவறானது” என தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை உரிமை:
மேலும், "வேலைவாய்ப்பு மற்றும் நியமனத்தில் சம வாய்ப்புக்கான உரிமையின் ஒரு அம்சமாக பதவி உயர்வுக்காக கருதப்படும் உரிமை, அரசியலமைப்பின் 14 மற்றும் 16(1) பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையாக கருதப்பட வேண்டும்” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.