Stock Market Update: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 243.36 புள்ளிகள் சரிந்து 66,039.38 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 59.2 புள்ளிகள் சரிந்து 19,691.85 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை தொடர்ந்து இன்றும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
கோல் இந்தியா, ஹீரோ மோட்டர்கார்ப், ஓன்.என்.ஜி.சி., டைட்டன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, ஹெச்.சி.எல். கம்பெனி, பஜாஜ் ஆட்டோ, டாக்டர்,ரெட்டி லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ்,டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி, ஜெ.எஸ்.டபுள்யு., இன்ஃபோசிஸ், பிரிட்டானியா, டாடா கான்ஸ் ப்ராட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
நெஸ்லே, டிவிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, டி.சி.எஸ்., அதானி போர்ட்ஸ், பவர்கிரிட் கார்ப், க்ரேசியம், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிண்டால்கோ, கோடாக் மஹிந்திரா, விப்ரோ, அதானி எண்டர்பிரைசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரிலையன்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, லார்சன், பாரதி ஏர்டெல், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., சிப்ளா, சன் பார்பா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை 6.0% உயந்தது. ஈரான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்ததும் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையிலும் பிரதிபலித்தது. முதலீடு செய்வதற்கு சிறந்ததாக கருதப்படுவது தங்கம். உலக அளவில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. வங்கி செப்டம்பர் மாத லாபம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.