Stock Market Today: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை: 76,687 புள்ளிகளில் சென்செக்ஸ்!
Stock market today: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரத்தை இங்கே காணலாம்.
பங்குச்சந்தை ஏற்றம்:
காலை 10.43 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 197.61 அல்லது 0.26 % புள்ளிகள் உயர்ந்து 76,687.69 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 69.95 அல்லது 0.29% புள்ளிகள் உயர்ந்து 23,326.15 ஆக வர்த்தகத்தை தொடங்கியது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்..
ஓ.என்.ஜி.சி. லார்சன், டாடா ஸ்டீல், பிரிட்டானியா, டாடா மோட்டர்ஸ்ம் அப்பல்லோ மருத்துவமனை , அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கான்ஸ் ப்ராட், டெக் மஹிந்திரா, ஹீரோ மோட்டர்காரொம் ஆக்ஸிஸ் வங்கி, என்,டி,பி,சி, எம் & எம், டிவிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ., அதானி போர்ட்ஸ், பவர்கிரிட் கார்ப், கோல் இந்தியா,, பஜாஜ் ஃபினான்ஸ்,சிப்ளா, ஈச்சர் மோட்டஸ், மாருதி சுசூகி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், சன் ஃபார்மா, டி.சி.எஸ்., நெஸ்லே, ஸ்ரீராம் ஃபினான்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
ஏசியன் பெயிண்ட்ஸ், பி.பி,சி,எல். டாக்டர் ரெட்டி லேப்ஸ், கொடாக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல், ஜெ,எஸ்.டபுள்யு, ஐ.டி.சி., ரிலையன்ஸ், ஹிண்டல்கோ, ஹெட்.டி.எஃப்.சி. வங்கி, ஸ்ரீராம் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
தேர்தல் முடிவுக்கு பிறகு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நரேந்திர மோடி பதவி ஏற்றதற்கு பிறகு சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. இன்று 200 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியிருக்கும் பங்குச்சந்தை இன்னும் அதிகரிக்குமா என்று முதலீட்டாளர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். பி.எஸ்.இ.-ல் எண்ணெய், கேஸ் குறியீடு 1% உயர்ந்துள்ளது.
நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 23,319 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. 2294 பங்குகள் லாபத்துடனும் 973 பங்குகள் நஷ்டத்திலும் 86 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்கிறது.
பி.எஸ்.இ.-யில் முதன்மை நிறுவனங்களான ஜி.எம்.ஆர். ஏர்போர்ட்ஸ்ம் லார்சன், BHEL, பாரத் ஃபோட்ஸ்ம் ரெயில்ஸ் விகாஸ், ABB இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு 2% அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.48 ஆக உள்ளது. இது 83.51 ஆக இருந்தது.