Stock Market Today:இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி; 800 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!
Stock Market Today: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
செவ்வாய்கிழமை புதிய உச்சம் தொட்டு வர்த்தகத்தை நிறைவு செய்தது இந்திய பங்குச்சந்தை. சென்செக்ஸ், நிஃப்டி கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 811.00 அல்லது 1.01% புள்ளிகள் சரிந்து 79,546.57 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 251.95 அல்லது 1.00% புள்ளிகள் சரிந்து 24,187.00ஆக வர்த்தகமானது.
வர்த்தக நேர தொடக்கத்தில், 200 புள்ளிகள் குறைந்த நிலையில், சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்து உள்ளது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
மாருதி சுசூகி, பிரிட்டானியா, ஹெச்.யூ.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
எம் & எம், ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஹெ.சி.எல்., பி.பி.சி.எல்.,டாடா மோட்டர்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்,ஹீரோ மோட்டர்கார்ப், ரிலையன்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ., பவர்கிரிட் கார்ப் டெக் மஹிந்திரா, விப்ரோ, என்.டி.பி.சி., அதானி எண்டர்பிரைசிஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஹெட்.டி.எஃப்.சி., இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.டி.சி., சிப்ளா, சன் ஃபார்மா,டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, க்ரேசியம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், அப்பல்லோ மருத்துவனமை ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
Emcure Pharma IPO க்ரே மார்க்கெட்டில் ஒரு பங்கின் விலை ரூ.300 ஆக உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1370-1390 வரை விற்பனையாகிறது. ப்ரீமியன் 3% அதிகரித்துள்ளது.
இது பங்குச்சந்தையில் லிஸ்டான முதன்முறையே முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. மகப்பேறு, ஹெ.ஐ.வி., தொற்றுநோய் எதிர்ப்புக்கான மருந்துகளை விற்பனை செய்யும் இந்தியாவின் மிக பிரபலமான நிறுவனம். இதற்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் 2.35% சதவீதம் குறைந்தது. நிஃப்டியை பொறுத்தவரையில் 50 பங்குகளில் 10 மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மீதமுள்ள 40 சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. NSE-யில் வோடஃபோன் ஐடியா, எஸ் பேங்க், ரெயில் விகாஸ் நிகாம், ஐ.ஆர். எஃப். சி, என்.ஹெச்.பி.சி. ஆகியவற்றின் பங்குகள் வர்த்தகத்தில் இருந்தன.