(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Today: ஐ.டி. பங்குகள் உயர்வு;புதிய உச்சம் தொட்ட நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
Stock market today: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரத்தை இங்கே காணலாம்.
பங்குச்சந்தை நிலவரம்:
காலை 10.43 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 499.55 அல்லதுபுள்ளிகள் உயர்ந்து 76,985.69 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 145,00 அல்லது 0.62% புள்ளிகள் உயர்ந்து 23.409.85 ஆக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
ஐ.டி. பங்குகளின் மதிப்பு ஏற்றத்தில் உள்ளது. நிஃப்டி, சென்செக்ஸ் உயர்ந்து பங்குச்சந்தை வரலாற்றில் புதிய சாதனையை எட்டியுள்ளது. நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளை எட்டி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்149.98 புள்ளிகள் உயர்ந்து 76, 606.57 ஆகவும் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 58.10 புள்ளிகள் உயர்ந்து 23, 322.95 ஆகவும் வர்த்தகமானது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
கோல் இந்தியா, பி.பி.சி.எல். ஹெச்.சி.எல். டெக், பவர்கிரிட் கார்ப், ஸ்ரீராம் ஃபினான்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், ஓன்.என்.ஜி.சி. ஹெச்.டி.எஃப்.டி வங்கி, டெக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல், டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், லார்சன், விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ. சிப்ளா, ஆக்ஸிஸ் வங்கி,இந்தஸ்லேண்ட் வங்கி, ஹிண்டால்கோ, டி.சி.எஸ்.ம் அல்ட்ராடெக் சிமெண்ட்,கோடாக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோம் அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப்,, சன் பார்மா, இன்ஃபோசிஸ்,க்ரேசியம், மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
பிரிட்டானியா, ஆசியன் பெயிண்ட்ஸ், டிவிஸ் லேப்ஸ், எம் & எம், ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.