Stock market Crash: ரூ.14 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு! காரணம் என்ன?
Stock market Crash: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது. இதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை (07.04.2025) மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,226.79 அல்லது 2.95% புள்ளிகள் சரிந்து 73,137.90 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 742.85 அல்லது 3.24% புள்ளிகள் சரிந்து 22,161.60 ஆகவும் வர்த்தகமாகியது. சென்செக்ஸ், நிஃப்டி, இரண்டும்ஐந்து சதவீதம் சரிந்துள்ளது.
07.04.2025- அன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே வர்த்தகம் சரிவுடன் நடந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 10 மணி நிலவரப்படி, 2 ஆயிரத்து 7800 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 509 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புள்ளிகள் சுமார் 930 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 975 புள்ளிகளில் வர்த்தகமானது.வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்து மீண்டது.
டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டர்ஸ், டைட்டன், லார்சன் அண்ட் டர்போ ஆகிய நிறுவனங்கள் உள்பட 775 நிறுவனங்களின் பங்குகள் ஓராண்டில் இல்லாத அளவு சரிவுடன் வர்த்தகமானது.
நிஃப்டியை பொறுத்தவரை ட்ரெண்ட், டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், ஹிண்டால்கோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், லார்சன், டாடா மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், பஜாஜ் ஆட்டோ, கோடாக் மஹிந்திரா, க்ரேசியம், எம்&எம், ஆக்சிஸ் வங்கி, ஜியோ ஃபினான்சியல், இன்ஃபோசிஸ், டாடா கான்ஸ் ப்ராட், ஹீரோ மோட்டர்கார்ஃப், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா,அதானி போர்ட்ஸ், சன் ஃபார்மா, டெக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல்ம் ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., மாருதி சுசூகி, விப்ரோ, ஐ.டி.சி. டி.சி.எஸ்., ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, அப்பல்லோ மருத்துவமனை, என்.டி.பி.சி., ஆகிய நிறுவனங்கள் சரிவுடன் வர்த்தகமானது.
பங்குச்சந்தை சரிவு - காரணம் என்ன?
- உலக நாடுகளின் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகியது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு வரி விதிப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறதார். அதன்படி, 10-50% வரை வரிவிதிப்பு செய்திருக்கிறார். இது மற்ற நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சீனாவின் ஹாங்காங் பங்குச்சந்தை 11% சரிவைச் சந்தித்துள்ளது. ஜப்பான் டோக்கியோ (7%), சீனாவின் ஷாங்காய் (7%), தென் கொரியா(5%) சரிந்துள்ளன.
- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அமெரிக்கா இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளது. இது பங்குச்சந்தைகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்களின் நலனுக்கு ஏற்றார்போல வர்த்தகம் நடைபெறாது என்பதுபோல சூழல் நிலவுவதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரிவிதிப்பு பணவீக்கம் அதிகரிக்கவும் கார்ப்ரேட் நிறுவங்களின் லாபகரமான தொழில் வளர்ச்சி குறைய வாய்ப்பும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
10 நொடிகளில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு:
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமானது. சென்செக்ஸ் 3000 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
உலக அளவில் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகிறது. இந்திய பங்குச்சந்தையில் சரிவு இன்னும் தொடரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், முதலீட்டாளர்கள் பதற்றத்தில் பங்குகளை விற்பனை செய்வது சரியான தேர்வாக இருக்காது.




















