Stock Market: ஏற்றத்துடன் தொடங்கி வீழ்ச்சியுடன் முடிந்த பங்குச்சந்தை..! வீழ்ச்சியில் அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்
Stock Market : இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தையானது மாலையில் வீழ்ச்சியில் முடிவடைந்தது
இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 249.58 புள்ளிகள் அதிகரித்து 60, 081 ஆக புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி,80.75 புள்ளிகள் அதிகரித்து 17,811.50 புள்ளிகளாக இருந்தது.
இந்நிலையில், தற்போது மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 287.70 புள்ளிகள் குறைந்து 59, 543.96 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 74.40 புள்ளிகள் குறைந்து 17,656.30 புள்ளிகளாக உள்ளது.
Sensex falls 287.70 points to end at 59,543.96; Nifty declines 74.40 points to 17,656.35
— Press Trust of India (@PTI_News) October 25, 2022
லாபம்- நஷ்டம்:
இந்நிலையில் பெல், கனரா வங்கி, டெக் மகேந்திரா எஸ்பிஐ வங்கி, மாருதி சுசுகி, பிஎன்பி உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று ஏற்றம் கண்டன.
நெஸ்ட்லே, கோடாக் மகேந்திரா, ஆர்பிஎல் வங்கி, பிரிட்டானியா, ஹச்டிஎஃப்சி வங்கி, அதானி போர்ட்ஸ் , உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
பொருளாதார மந்த நிலை:
ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது.
இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அந்நிய முதலீட்டாளர்கள், வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதனால் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது.
இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை டாலர்களில் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்றத்துடன் தொடங்கி வீழ்ச்சியில் முடிவு:
இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தையில், சென்செக்ஸ் குறியீடு 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சென்றது. மேலும் நிஃப்டி புள்ளிகளும் ஏற்றமடைந்தன. ஆனால், இன்று மாலை முடிவடையும் போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் வீழ்ச்சியை சந்தித்தன.
ரூபாயின் மதிப்பு
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.83 ஐ கடந்து சென்றது.
Rupee rises 12 paise to close at 82.76 (provisional) against the US dollar
— Press Trust of India (@PTI_News) October 25, 2022
கடந்த ஒரு வாரமாக பங்குகள் சற்று ஏற்றம் கண்டு வருவதால், ரூபாயின் மதிப்பு சற்று வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 12 காசுகள் அதிகரித்து 82.76 என்ற அளவில் உள்ளது.