மேலும் அறிய

Silver: சரியும் வெள்ளி விலை.! முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.? நகை வியாபாரிகள் சொல்லும் சீக்ரெட் தகவல்

Silver Investment : தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது வரும் நாட்களில் ராக்கெட் வேகத்தில் புதிய உச்சத்தை தொடும் என்பதால் தங்க நகைகளை வாங்க முடியாதவர்கள் வெள்ளி மீது முதலீடு செய்ய நல்ல சான்ஸ் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறப்போகுது தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது கைக்கு எட்ட முடியாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இந்த வருடமோ 1 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் தங்க நகையை நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதே நேரம் தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையானது அதிகரிக்க தொடங்கியது.

தங்கத்தை வாங்க முடியாத மக்கள் வெள்ளி மீது முதலீட்டை அதிகரித்தனர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில்,2024 ஆண்டில் ஒரு கிலோ வெள்ளி  ரூ.75,000 முதல் ரூ.90,000 வரை உயர்ந்தது. 2025 ஆம் ஆண்டு இறுதியில் வெள்ளியின் தேவை அதிகரிப்பால் விலை ஒரு லட்சத்தை தாண்டியது.இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. 

 வெள்ளி விலை வரலாறு

இதற்கு முக்கிய காரணமாக டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தன. இதனால் தங்கம் விலையானது இமாலய உசத்தை தொட்டது. எனவே தங்கத்தை வாங்க முடியாதவர்கள் வெள்ள மீது முதலீட்டை அதிகரித்தனர்.பின்னர் சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை திருத்தங்கள் காரணமாக ரூ.2,50,000 முதல் ரூ.2,80,000 வரையான விலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மட்டுமல்ல வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஏபிபி நாடுவிற்கு சிறப்பு தகவல் தெரிவித்த தங்கம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறுகையில், வெள்ளியில் முதலீடு செய்ய தற்போது நல்ல தருணம் என கூறியுள்ளார். தற்போது ஒரு கிலோ 2.50  லட்சத்தை எட்டியுள்ள நிலையில், வரும் நாட்களில் புதிய உச்சத்தை வெள்ளி விலை எட்டும் என தெரிவித்துள்ளார். எனவே வெள்ளியில் முதலீடு செய்ய இது நல்ல சான்ஸ் எனவும் கூறியுள்ளார்.

ராக்கெட் வேகத்தில் வெள்ளி விலை

அந்த வகையில் தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே போர் முடிவிற்கு வந்ததையடுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தங்கம் மற்றும் வெள்ளி ராக்கெட் வேகத்தில் புதிய உச்சத்தை தொடும் என தெரிவித்துள்ளார். எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்ய முடியாவர்கள் வெள்ளி மீது முதலீடு செய்ய நல்ல தருணமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget