Share Market Today:நிஃப்டி 24,750 புள்ளிகளில் வர்த்தகம் - சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!
Share Market Today: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகியது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 43.15% அல்லது 0.060% புள்ளிகள் சரிந்து 81,179.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 63.25% அல்லது 0.26% புள்ளிகள் சரிந்து 24,794.30 ஆகவும் வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், வர்த்த நேர முடிவில் சரிவில் இருந்தது.
ஐ.டி., FMCG, ஆகிய துறைகள் சரிவில் இருந்தது. மதியம் 2.30 மணியளவில் செக்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்தது. நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்தது.
உலக அளவில் சந்தை பொருளாதாரத்தில் நிலவும் நிலையின்மையால் இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகிவருகிறது. 1,041 பங்குகள் ஏற்றத்துடம் 2,466 பங்குகள் சரிவுடனும் 104 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமானது.
ஹூண்டாய் மோட்டர் இந்தியா ஐ.பி.ஒ. அக்டோபர் 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு ஐ.பி.ஓ. அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.75 அதாவது 3,8% அதிகமாக இருந்தது. இது 22-ம் தேதி ரூ.2,035 ஆக லிஸ்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சந்தையில் 15% பங்கு வைத்துள்ள இரண்டாவது பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து 84.06 ஆக இருந்தது. இது வெள்ளிக்கிழமை 84.07 ஆக இருந்தது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
பாரதி ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், எம்&எம், ஈச்சர் மோட்டர்ஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, ஹீரோ மோட்டர்கார்ப், நெஸ்லே, லார்சன், அப்பல்லோ மருத்துமனை, என்.டி.பி.சி., எஸ்.பி. ஐ. லைஃப் இன்சுரா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
டாடா கான்ஸ் ப்ராட், கோடாக் ம்ஹிந்திடா, பஜாஜ் ஃபின்சஎவ், இந்தஸ்லேண்ட் வங்கி, பி.பி.சி.எல்., ஓ.என்.ஜி.சி., ட்ரெண்ட், அதானி எண்டர்பிரைசிஸ், அதானி போர்ட்ஸ், சிப்ளா, ஹிண்டால்கோ, பஜாஜ் ஃபினான்ஸ், பிரிட்டானியா, பாரத் எலக்ட்ரிக்கல்ஸ்ம் அல்ட்ராடெக் சிமெண்ட், க்ரேசியம், இன்ஃபோசிஸ், ஜெ.எஸ்.டபுள்யு, ஸ்டீல், கோல் இந்தியா, டி.சி.எஸ்., ஸ்ரீராம் ஃபினான்ஸ், எஸ்.பி.ஐ., ஹெச்.யு.எல், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா மோட்டர்ஸ், பாரதி ஏர்டெல், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, ஹெச்.சி.எல். டெக், ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி., டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.