Share Market: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை.. லாபத்தில் எஸ்பிஐ, டிசிஎஸ்
இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்துடன் இன்று முடிவடைந்தது
அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற சூழல் நிலவி வருவதால், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
பங்கு சந்தை நிலவரம்:
இன்றைய நாள் முடிவில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 762.10 புள்ளிகள் அதிகரித்து 62,272.68 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 216.85 புள்ளிகள் அதிகரித்து 18,484.10 புள்ளிகளாக உள்ளது. இன்று பங்குச்சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sensex rallies 762.10 points to settle at all-time high of 62,272.68; Nifty jumps 216.85 points to 18,484.10
— Press Trust of India (@PTI_News) November 24, 2022
லாபம் - நஷ்டம்
அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, விப்ரோ, பிரிட்டாணியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
சிப்லா, கோல் இந்தியா,டாடா மோட்டார்ஸ்,பஜாஜ் ஃபினான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
ரூபாய் மதிப்பு:
மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது.
Rupee gains 29 paise to close at 81.64 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) November 24, 2022
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 20 காசுகள் அதிகரித்து 81.65 ரூபாயாக ஆக உள்ளது.
Also Read: Gold Silver Price Today : தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரத்தின் முழு விவரம் இதோ!