Share Market: ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தை: லாபத்தில் ஓ.என்.ஜி.சி, டாடா ஸ்டீல் பங்குகள்...
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
சமீபத்திய அமெரிக்க சில்லறை விற்பனை தரவுகள் வெளியாகின. இது பணவீக்கமானது, சற்று சாதகமான சூழ்நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலை, இந்திய பங்குகள் உயர்வுக்கு உதவின.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 44.42 புள்ளிகள் உயர்ந்து 61, 319. 51 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 18,035 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
நிஃப்டியில் ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, அப்போலோ மருத்துவமனை, திவிஸ் லேப்ஸ், நெஸ்லே இந்தியா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பிபிசிஎல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் எம் அண்ட் எம் ஆகிய பங்குகள் விலை சரிவில் வர்த்தகமாயின.
Sensex ends 44.42 points higher at 61,319.51; Nifty advances 20 points to 18,035.85
— Press Trust of India (@PTI_News) February 16, 2023
துறைகளை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம், உலோகம், ரியாலிட்டி ஆகிய துறைகள் தலா 1 சதவீதம் உயர்ந்துள்ளன.
ஜனவரி மாதத்திற்கான அமெரிக்க சில்லறை விற்பனை தரவுகள், சாதகமக உள்ளதை தொடர்ந்து உள்நாட்டு பங்குகளின் விலை உயர்வை கண்டுள்ளது.
இந்த தரவுகள் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என கூறப்படுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் , இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
தங்கம் இறக்குமதி குறைவு:
இந்தியாவின் ஜனவரி மாத தங்க இறக்குமதி, கடந்த ஆண்டை விட 76 சதவீதம் சரிந்து 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 11 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு 45 டன்னாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததாலும், இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் நகை வியாபாரிகள் கொள்முதலை ஒத்திவைத்ததாலும் இறக்குமதி குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு:
Rupee rises 11 paise to close at 82.72 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) February 16, 2023
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11 சதவீதம் வலுவடைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 82.72 ஆக இருந்தது.
Also Read: Vegetable Price: கீழிறங்காத முருங்கைக்காய், பூண்டு... இன்றைய காய்கறி விலை பட்டியல்!