Share Market: வாரத்தின் முதல் நாளே சரிவுடன் தொடங்கி சரிவிலே முடிவடைந்த பங்கு சந்தை... ஏற்றத்தில் எஸ்.பி.ஐ
இந்திய பங்கு சந்தையானது, இன்றையை நாள் முடிவில் சரிவுடன் முடிவடைந்தது.
இன்றைய வாரத்தின் தொடக்க நாளில், காலையில் தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வந்தது. அதையடுத்து, இன்றைய நாள் முடிவிலும் சரிவுடனே இந்திய பங்கு சந்தை முடிவடைந்தது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 152.06 அல்லது 0.25 % புள்ளிகள் குறைந்து 60,689.82 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 89.45 குறைந்து 17,764.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
Sensex declines 334.98 pts to settle at 60,506.90; Nifty falls 89.45 points to 17,764.60
— Press Trust of India (@PTI_News) February 6, 2023
இன்றைய நாள் தொடக்கத்தில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 152.06 அல்லது 0.25 % புள்ளிகள் குறைந்து 60,689.82 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 53.85 அல்லது 0.30% புள்ளிகள் குறைந்து 17,800.20 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்துள்ளது.
லாபம்-நஷ்டம்
நிஃப்டி- 50ல் என்டிபிசி, சிப்ளா, கிராசிம், கோல் இந்தியா, அப்போலோ மருத்துவமனை, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, லார்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ, இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா, சன் பார்மா, மாருதி, சுசிகி, ஓஎன்ஜிசி, லார்சன், பிரிட்டானியா, டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
தாக்கம்:
இந்திய ரிசர்வ் வங்கியானது, பணவீக்கம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இன்று முதல் 3 நாட்கள் ( பிப்.6 முதல் பிப். 8 ) இக்கூட்டம் நடைபெறுகிறது.
இன்று தொடங்கும் கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள், வங்கியில் வீட்டு கடன் , வாகன கடன் வாங்கியோருக்கு இ.எம்.ஐ செலுத்தும் தொகையானது அதிகரிக்க கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி கூட்டமும், இந்திய பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாயின் மதிப்பு:
Rupee falls 65 paise to close at 82.73 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) February 6, 2023
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 காசுகள் குறைந்து 82.73 ரூபாயாக உள்ளது.