Stock Market Today:மைக்ரோசாப்ட் கிளவுட் மென்பொருள் முடக்கம் எதிரொலி; சென்செக்ஸ் 738 புள்ளிகள் வீழ்ச்சி!
Stock Market Today: மைக்ரோசாஃப்ட் கிளவுட் மென்பொருள் முடக்கத்தை சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை குறித்த விவரத்தை இங்கே காணலாம்.
![Stock Market Today:மைக்ரோசாப்ட் கிளவுட் மென்பொருள் முடக்கம் எதிரொலி; சென்செக்ஸ் 738 புள்ளிகள் வீழ்ச்சி! Sensex tanks 750 Points Nifty closes below 24,550 Q1 results drag Ultratech BPCL 3-4%, lifts Infosys 2% Stock Market Today:மைக்ரோசாப்ட் கிளவுட் மென்பொருள் முடக்கம் எதிரொலி; சென்செக்ஸ் 738 புள்ளிகள் வீழ்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/4006f8cd63213930ea3477a026a109491721385930751333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் இணையதள சேவைகளின் முடக்கம் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 738.81 அல்லது 0.91% புள்ளிகள் சரிந்து 80,604.65 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 269.95 அல்லது 1.09% புள்ளிகள் சரிந்து 24,530.90 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி நிறைவு செய்துள்ளது. அடுத்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தை ஏற்றத்துடம் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிஃப்டி முதன்முறையாக 24,700 புள்ளிகளில் கடந்து புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸ் வரலாற்றில் முதன் முறையாக 81,800 வரை புள்ளிகளை கடந்தது. கடந்த இரண்டு நாட்களாக ஐ.டி. பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில், இன்று சில ஐ.டி. நிறுவனங்கள் மட்டுமே ஏற்றம் கண்டன.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., ஏசியன் பெயின்ட்ஸ், பிரிட்டானியா,மைண்ட்ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
பி.பி. சி.எல்., டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரான் ஜெ.எஸ்.டபுள்யூ, விப்ரோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், பவர்கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹீரோ மோட்டர்கார்ப், அப்பல்லோ மருத்துவம்னை, பஜாஜ் ஃபினான்ஸ்,டாடா மோட்டர்ஸ், நிலையன்ஸ், பாரதி ஏர்டெல், என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், டிவிஸ் லேப்ஸ், க்ரேசியம், எம்& எம், அதானி போர்ட்ஸ், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மஹிந்திரா, சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டைட்டன் கம்பெனி, நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், டிவிஸ் லேப்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
பங்குச்சந்தையில் பெரும்பாலான பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)