Share Market: ஏற்றத்துடன் நிறைவடந்தது பங்குச்சந்தை! சென்செக்ஸ் 491 புள்ளிகள் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 491.01 அல்லது 0.85% புள்ளிகள் உயர்ந்து 58,410.98 புள்ளிகளில் வர்த்தகம் ஆனாது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 126.10 அல்லது 0.73% புள்ளிகள் உயர்ந்து 17, 311.80 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, வாகனம் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்திய பங்கு சந்தையின் இந்த புதிய உச்சத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஜார் ஃபின்ஸ்சர்வ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்டரிஸ் மற்றும் இண்டஸ்லாண்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின.
Sensex climbs 491.01 points to end at 58,410.98 points; Nifty advances 126.10 points to 17,311.80 points
— Press Trust of India (@PTI_News) October 17, 2022
லார்சன் அண்ட் டர்போ, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், விப்ரோ, டாட்டா ஸ்டீல், நெஸ்லே, பவர் கிரிட் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவுடன் வர்த்தகமாகின.
ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. க்ரூட ஆயில் 0.07 சதவீதம் சரிந்து ஒரு பேரல் அமெரிக்க டாலரில் 91.57 டாலராக விற்பனையானது.
மேலும் வாசிக்க..
Crime: காதலுக்கு எதிர்ப்பு.. மனமுடைந்து பெண் தற்கொலை.. காதலனை விஷம் ஊற்றி கொன்ற பெண்ணின் தந்தை!
Chief Justice Of India : இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார் டி.ஒய். சந்திரசூட்..? யார் இவர்?