Share Market Today: தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 79,568 புள்ளிகளில் வர்த்தகம்!
Share Market Today: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவுடன் வர்த்தகமாகியது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 499.27 அல்லது 0.62% புள்ளிகள் சரிந்து 79,508.45 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 159.45 அல்லது 0.66% புள்ளிகள் சரிந்து 24,180.50 ஆகவும் வர்த்தகமாகியது.
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. உலக பொருளாதார நிலை, அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வது, அமெரிக்க அதிபர் தேர்தல் ஒட்டிய நிலையின்மை ஆகியவை காரணமாக பங்குச்சந்தை சரிவுடன் இருக்கிறது.
மஹிந்திரா & மஹிந்திரா, சன் ஃபார்மா, டாடா மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், இன்ஃபோசி, இந்தஸ்லேண்ட் வங்கி ஆகியவை சரிவுடன் இருந்தது. என்.டி.பி.சி. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, லார்சன் & சர்போ, நெஸ்லே ஆகியவை லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்.
Foreign Institutional Investors (FIIs) இந்திய பங்குச்சந்தை ரூ.3,228.08 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புமின்மை தொடர்பான தரவுகள், அதிபர் தேர்தாஅகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிய பங்குச்சந்தைகளில் சியோல் மற்றும் சாங்காய் சரிவுடனும் டோக்கியோ ஹாங்காங் உள்ளிட்டவை ஏற்றத்துடனும் வர்த்தகமாகின. கச்சா எண்ணெய் 0.18 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 71.55 டாலரில் விற்பனையாகி வருகிறது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, என்.டி.பி.சி., பாரத் எலக்ட்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஹோல்டிங்க்ஸ் & இன்வெஸ்ட்மென், எல்.ஐ.சி., ஜெ.எஸ்.டபுள்யு எனர்ஜி, மார்கோடெக் டெவலபர்ஸ், க்ரேசியம் இண்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ., லார்சன் & டர்போ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரன்ஸ், எம்புஜா சிமெண்ட்ஸ், டாடா கன்சியுமர் பராடக்ட்ஸ், ஆர்.சி.இ. லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
டாடா மோட்டர்ஸ், இந்தியன் ஆயில், இந்தஸ்லேண்ட் வங்கி, டாபர் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி இந்தியா, சிப்ளா, டாக்டர் டெட்டிஸ் லெப்ஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப்டாடா பாவர் கம்பெனி, பாரத் பெட்ரோலியம், மஹிந்திரா & மஹிந்திரா, ஹிண்டாலோ, அதானி எண்டர்பிரைசிஸ், ஜெ.எஸ்.டபுல்யு. ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.