மேலும் அறிய

Share Market Crash: ரூ.10 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை கடும் சரிவு! காரணம் என்ன?

Share Market Crash: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய (27.01.2025) வர்த்தக நேரத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரு நாளில் ரூ.10 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 824.29 அல்லது 1.08% புள்ளிகள் சரிந்து 75,366.17 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 263.05 அல்லது 1.14% புள்ளிகள் சரிந்து 22,829.15 ஆகவும் வர்த்தகமாகியது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பிரிட்டானியா, எம்&எம், ஹெச்.யு.எல்., எஸ்.பி.ஐ., லார்சன், மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

ஹெச்.சி.எல்., டெக் மஹிந்திரா, விப்ரோ, ஹிண்டாகோ, பவர்கிரிட் காஃப், ஸ்ரீராம் ஃபினான்ஸ், டாடா மோட்டர்ஸ், இன்ஃபோசிஸ், இந்தஸ்லெண்ட் வங்கி, பாரதி ஏர்டெல், பாரத் எலக்ட்ரிக்கல், டாடா கான்ஸ் பராட், அதனை எண்டர்பிரைசிஸ், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ். சன் ஃபார்மா, பஜாஜ் ஃபினான்ஸ், கோல் இந்தியா, ஹெச்.டி,எஃப். சி. லைஃப், க்ரேஇச்யம், நெஸ்லே, ரிலையன்ஸ், ட்ரெண்ட், அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., எஸ். பி.ஐ. லைஃப் இன்சுரா, ஈச்சர் மோட்டஎஸ், பி.பி.சி.எல்., சிப்ளா, பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ்,  என்.டி.பி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.டி.சி., கோடாக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

இந்திய பங்குச்சந்தை வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்த்து. நிஃப்டி 22,800 புள்ளிகளில் வர்த்தகமானது. 
ஸ்மால்கேப்,. மிட்கேப் கடுமையாக சரிவை பதிவு செய்தது. மிட்கேப் 3% ஸ்மால்கேப் 4% சரிந்த்து. BSE லிஸ்ட் ஆகியிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை கடும் சரிவால் ரூ.10 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டட்டது. ரூ.419 லட்சம் கோடியில் இருந்து ரூ.410 லட்சம் கோடியாக சந்தை மூலதனம் இருந்தது. (MidCap). 

நிஃப்டியை பொறுத்தவரை மீடியா, ஐ.டி. மெட்டல், ஃபார்மா உள்ளிட்ட துறைகள் 3-4 சதவீதம் சரிவடைந்தது.  நிஃப்டி வங்கி, ஆட்டோ, FMCG aஅகியவையும் ஒரு சதவீதம் சரிந்தது. 

இந்திய பங்குச்சந்தையின் கடுமையான சரிவிற்கு காரணமாக சிலவற்றை பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான  பட்ஜெட் பிப்ரவரி1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருக்கின்றனர். 

இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூன்றாம் காலாண்டு நிதி வளர்ச்சி பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் பல நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட வளர்ச்சியில் சற்று குறைவாக இருக்கிறது. Foreign portfolio investors (FPIs) அக்டோபர் 2024-ல் இருந்து இந்திய பங்குச்சந்தையில் உள்ள பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவரை ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். 2025 ஜனவரி 24-ம் தேதி வரை ரூ.69 ஆயிரம் கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, US Fed ரேட் அறிவிப்பு வெளியாக இருப்பது ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு டாரிஃப் கொள்கைகளை அறிவித்துள்ளதும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என சொல்கிறனர்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
Embed widget