ஆன்லைன் மோசடியிலிருந்து பாதுகாப்பது எப்படி? எஸ்பிஐ வங்கியின் அறிவுரைகள் !
அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாத்து கொள்ள எஸ்பிஐ வங்கி ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் மக்கள் தங்களுடைய பணப் பரிவர்த்தனைகளை பெரும்பாலும் இணையதள முறையிலேயே மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறும் புகார்கள் அதிகம் எழுந்துள்ளன. குறிப்பாக சமீபத்தில் எஸ்பிஐ வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி புகார்கள் அதிகரித்து வருகின்றன. எஸ்பிஐ வங்கி கிரேடிட் கார்டு புள்ளிகளில் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் உள்ளது என்று சில குறுஞ்செய்தி வர தொடங்கியுள்ளது. இந்தச் செய்தில் வரும் லிங்கை பயன்படுத்தினால் அது உண்மையான எஸ்பிஐ வங்கியின் தளம் இல்லாததால் பலர் தங்களுடைய பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பதிவிட்டால் அது ஹேக்கர்களுக்கும் எளிதாக கிடைத்து விடும். அதை வைத்து அவர்கள் மோசடியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த மாதிரியான மோசடிகளை தவிர்க்க எஸ்பிஐ வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளன. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், “உங்களுடை விவரங்களை சரி செய்து கொள்வதாக வரும் KYC அழைப்புகள் முற்றிலும் தவறான ஒன்று. அப்படி விவரங்களை கேட்டு பல போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். அப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக அரசின் சைபர் க்ரைம் பிரிவிற்கு தகவல் கொடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளது.
KYC fraud is real, and it has proliferated across the country. The fraudster sends a text message pretending to be a bank/company representative to get your personal details. Report such cybercrimes here: https://t.co/3Dh42iwLvh#StateBankOfIndia #CyberCrime #StaySafeStayVigilant pic.twitter.com/eVVFAnMgTN
— State Bank of India (@TheOfficialSBI) July 12, 2021
ஏற்கெனவே கடந்த மாதம் எஸ்பிஐ வங்கி ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தது. அதில், "உங்களின் பாதுகாப்பு தான் எங்களுடைய முன்னுரிமை" என்று கூறி ஒரு அறிவுரையை வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் போன்களில் உரிய இடங்களிலிருந்து மட்டும் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வேறு எந்த இடங்களிலிருந்தோ அல்லது தெரியாத நபர் கூறும் இடத்திலிருந்தோ செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது.
ஏனென்றால், அப்படி பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள் மொபைல் போனில் பரிவர்த்தனை செய்யும் போது ஏடிஎம் அல்லது கிரேடிட் கார்டு எண், சிவிவி எண், குறுஞ்செய்தி, கடவுச்சொல் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கண்காணிக்க வாய்ப்பு உள்ளது. அதன்மூலம் உங்களுடைய வங்கி கணக்கில் மோசடி செய்ய வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்று எச்சரித்துள்ளது.
Your Safety is our Priority!
— State Bank of India (@TheOfficialSBI) June 10, 2021
Here’s a quick security tip that could save you from losing personal/financial data!
Download apps only from verified sources. Do not download any app on the advice of unknown persons.
Stay Alert! #StaySafe!#CyberSafety #StayAlert #OnlineScam pic.twitter.com/o4o6KeCVJs
தற்போது அதிகளவில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருவதால் வங்கிகள் இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றன். அத்துடன் ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்களை சைபர் க்ரைம் (https://cybercrime.gov.in) இணையதளத்தில் அளிக்கவும் வங்கிகள் வலியுறுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பணம் உங்களை வந்தடைய வேண்டுமா? இதோ அதற்கான தகுதிகள்!




















