வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறீர்களா? அப்போ இது உங்களுக்குதான்! தெரிஞ்சிக்கோங்க!
இந்த முடிவு கடன் வாங்குபவர்களை நேரடியாக பாதிக்கிறது. அவர்களின் EMI கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஓவ்வொருவருக்கு வீடு என்பது கனவாக உள்ளது. அதற்காக ஒவ்வொருத்தரும் பலத்தரப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். நாளுக்கு நாள் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆடம்பரமாகவும் விசாலமாகவும் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலானோர் வீட்டு கடன்களை நம்பியே இருக்கின்றனர். அதேநேரத்தில் பல நேரங்களில் எந்த அளவுக்கு கடன் வாங்குகிறார்களோ அதே அளவுக்கு இஎம்.ஐ கட்டத்தவறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ வட்டி விகிதத்தை 6.5%ஆக இருக்கும் என முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு உடனடியாக எந்த சலுகையும் இருக்காது. அதனால் இ.எம்.ஐ கட்டுவதிலும் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு கடன் வாங்குபவர்களை நேரடியாக பாதிக்கிறது. அவர்களின் EMI கள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படும் ரெப்போ விகிதம், நாடு முழுவதும் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரூ.75 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகள் வாங்க வீட்டுக்கடன்களின் பங்கு ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
அளவுக்கு அதிகமாக லோன் வாங்கிவிட்டு இ.எம்.ஐ கட்டத் தவறினால் சட்ட நடவடிக்கையை நீங்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிலும் ரிசர்வ் வங்கி விதியை பற்றி அறிந்து கொள்வதும் முக்கியம்.
வீட்டு கடன் வாங்குவது முன்புபோல் கஷ்டம் இல்லை. எளிதாக பெற முடிகிறது. அதற்கான இ.எம்.ஐ கட்டுவதுதான் கஷ்டம். அதிலும் மூன்று தவணைகளுக்கு மேல் கட்டாமல் விட்டுவிட்டால் பிரச்சினையை நாமே தேடிக்கொள்வது போன்றுதான்.
ஒரு வாடிக்கையாளர் முதல் தவணையை கட்டத்தவறினால் வங்கி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது. இரண்டாவது தவணை கட்டத்தவறினால் நோட்டீஸ் அனுப்பும். மூன்றாவது தவணை கட்டவில்லையென்றால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கும். உங்களை கடன் செலுத்தாதவர் என அறிவிக்கும். சிபில் ஸ்கோரை குறைக்கும். அடுத்த முறை கடன் வாங்க தகுதியற்றவர் என்ற முத்திரை குத்தப்படும்.
வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்த போதுமான கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதாவது கடைசி சாய்ஸ் ஏலம்தான். அதில் கடன் தொகையை கட்டிவிட்டால் வீடு ஏலத்திற்கு செல்லாமல் பாதுகாக்கப்படும். அவ்வாறு இல்லை என்றால் ஏலம் மூலம் வரும் பணம் கடன் தொகையை அடைக்கும்.
ஒரு மாதத்திற்கு வாடிக்கையாளர் தவணையை செலுத்தவில்லை என்றால் வங்கி ஏல அறிவிப்பை மேற்கொள்ளும். இருப்பினும் வாடிக்கையாளர் இந்த ஆறு மாதங்களில் வங்கியை அணுகி நிலுவைத் தொகையை செலுத்தி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம்.





















