Bank Holidays | ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று காரணமாக வங்கிகள் அனைத்தும் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் கடந்த 17-ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வங்கிகள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு அரசு தளர்வுகள் அல்லாத கடுமையான ஊரடங்கை அறிவித்தது. அப்போது வங்கியில் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஜூன் 7-ஆம் தேதி வரை வங்கிகளில் 33 சதவிகித பணியாளர்களுடன் தமிழ்நாட்டில் வங்கிகள் இயங்கும். இந்தச் சூழலில் அடுத்த மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை ?
பொதுத்துறை வங்கிகள் எப்போதும் 2 ஆவது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால் ஜூன் மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நான்கு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை. அதேபோல் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகவே மொத்தமாக அடுத்த மாதம் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை வர உள்ளது.
மேலும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவசரமான தேவைகளுக்கு மட்டும் வங்கிகளுக்கு வரவேண்டும் என்று வங்கி நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. அனைத்து வங்கிகளின் இணையதள சேவைகளும் எப்போதும் இயங்கி வருவதால், மற்ற தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் இணைய தள சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 7-ஆம் தேதி வரை 33 சதவிகித பணியாளர்களை கொண்டே வங்கிகள் இயங்கும்.
மேலும் படிக்க: ”உள்ளம் நிறைந்த கலைஞரை, நம் இல்லத்திலே கொண்டாடுவோம்” - முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அதற்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் தினசரி பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் ஏதாவது உள்ளூர் பொது விடுமுறை இருந்தால் அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வரும் ஜூன் மாதம் வங்கிகளுக்கு வேறு எந்த பொது விடுமுறையும் இல்லை. எனவே ஜூன் மாதத்தில் வங்கிகள் 6 நாட்களுக்கும் மட்டும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.