மேலும் அறிய

புதுச்சேரியில் பிற மாநில கார்கள் ரிஜிஸ்ட்ரேஷன்: ஒரே முகவரியை பயன்படுத்தி மோசடி நடந்தது அம்பலம்!

கடந்த 2016-17 முதல் 2018-2019 வரை 11,454 பிற மாநில வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது

புதுச்சேரியில் குறைந்த வரியை பயன்படுத்தி ரூ.20.49 கோடி மதிப்புள்ள 117 வாகனங்கள் பதிவால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது.

போக்குவரத்துத்துறை தொடர்பான தணிக்கை அறிக்கை விவரம்:

இந்திய கணக்காய்வு தணிக்கையின் போது, புதுச்சேரியில் ஒரே முகவரியில் ஏராளமான வாகனங்கள் பதிவாகியிருந்தன. கடந்த 2016-17 முதல் 2018-2019 வரை 11,454 வாகனங்கள் பிற மாநிலங்களில் நிரந்தர முகவரி உள்ள நபர்களால் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. பதிவை ஆராய்ந்ததில் வெவ்வேறு வாகன உரிமையாளர்கள் பிரமாண பத்திரங்கள் மூலம் ஒரே முகவரியை தெரிவித்திருந்தது கண்டறியப்பட்டது.

புதுச்சேரியில் பிற மாநில கார்கள் ரிஜிஸ்ட்ரேஷன்: ஒரே முகவரியை பயன்படுத்தி மோசடி நடந்தது அம்பலம்!

ஒரே முகவரியை பல வாகன உரிமையாளர்கள் திரும்பத் திரும்ப தெரிவித்ததையும் தணிக்கைத்துறை கண்டறிந்தது. இந்த மூன்று வருட காலத்தில் மிக அதிக மதிப்புக்கொண்ட117 வாகனப் பதிவுகள் வெறும் ஐந்து முகவரிகளிலேயே பதிவாகி இருந்தது. இவர்களின் சொந்த மாநிலங்களில் வாகன வரி விகிதங்கள் அதிகமாய் இருந்ததாலும் புதுச்சேரியில் குறைவாய் இருந்ததாலும் புதுச்சேரியில் வாகனப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பல கோடிமதிப்புள்ள 117 வாகனங்களை பதிவு செய்த உரிமையாளர்கள், புதுச்சேரியில் குறைவான வரிவிதிப்பை பயன்படுத்தி தற்காலிக நடப்பு முகவரியை தெரிவிக்கலாம் என்ற விதியை பயன்படுத்தி உள்ளனர். ரூ.40 லட்சம் மட்டுமே வரி செலுத்தி வாகனப்பதிவு செய்துள்ளனர். சொந்த மாநிலங்களில் ரூ. 20.49 கோடி மதிப்புள்ள வாகனங்களை இவர்கள் பதிவு செய்திருந்தால் ரூ. 2.48 கோடி வரியாக செலுத்த வேண்டியிருக்கும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பிற மாநில கார்கள் ரிஜிஸ்ட்ரேஷன்: ஒரே முகவரியை பயன்படுத்தி மோசடி நடந்தது அம்பலம்!

இதுபற்றி போக்குவரத்துதுறை மற்றும் போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, போக்குவரத்துத்துறையினர் முகவரி உண்மை தன்மையை ஒப்பிட்டு பார்ப்பதில்லை. பல வாகனங்கள் ஒரே முகவரியை தந்து வாகனப்பதிவு நடந்துள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் தணிக்கைத்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

Kanimozhi Speech: வாழ்க்கையை நினைத்தால் பயமாக இருக்கிறது - கனிமொழி MP!

வெளிமாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள், பிரபல தொழிலதிபர்கள் தங்கள் கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து வந்தனர். இதனால் அந்த மாநிலங்களுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து போலீஸ் விசாரணை வழக்குப்பதிவு வரை சென்றது. குறிப்பாக கேரளத்திலிருந்து நடிகர், நடிகைகள், விஐபிக்கள் இதுபோல் அதிகளவில் ஈடுபட்டனர். பல கோடி இதனால் அந்த மாநிலங்களுக்கு இழப்பு ஏற்பட்டது தணிக்கை அறிக்கையில் உறுதியாகியுள்ளது. தற்போது வாகன வரி உயர்ந்துள்ளதால் உயர்ரக வாகனங்கள் பதிவு தற்போது அதிகளவில் இல்லை  என்று குறிப்பிட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!
TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!
TN Rain: இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:  இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
TN Rain: இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு;  இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு; இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Embed widget