மேலும் அறிய

Petrol price hike: புதிய உச்சம்.. தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் விலை!

வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்து வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
அதன்படி, அரியலூர்-100.13, கோவை-102.83, கடலூர்-101.43, தர்மபுரி-100.68, திண்டுக்கல்-100.39,
ஈரோடு-100.08, கள்ளக்குறிச்சி-101.44, காஞ்சிபுரம்-100.21, கன்னியாகுமரி-100.13, கரூர்-100.07, கிருஷ்ணகிரி-100, மதுரை-100.06, நாகப்பட்டினம்-100.22, நாமக்கல்-100.20, நீலகிரி-101.47,
பெரம்பலூர்-100.04, புதுக்கோட்டை-100.04, ராமநாதபுரம்-100.08, ராணிப்பேட்டை-100.50,
சேலம்-100.33, சிவகங்கை-100.59, தென்காசி-100.20, தஞ்சாவூர்-100, தேனி-100.64, திருப்பத்தூர்-101.46,
திருவண்ணாமலை- 100.80, திருவாரூர்-100, தூத்துக்குடி-100.22, திருப்பூர்-100.09, வேலூர்-100.3,
விழுப்புரம்-101.05, விருதுநகர்-100.84, மயிலாடுதுறை-100, செங்கல்பட்டு-100, நெல்லை-100.11 விற்பனை செய்யப்படுகிறது. சென்னை பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

டீசல் விலை பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டருக்கு 95 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை அதிகரிப்பால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 31 முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Petrol price hike: புதிய உச்சம்.. தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் விலை!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அதனை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமலேயே இருக்கின்றனர்.

SBI ATM New Rules : பணம் எடுப்பதற்கு புதிய விதியை அறிவித்த எஸ்பிஐ - முழு விவரம்!

இதற்கிடையே சட்டப்பேரவையில், திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரி குறைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் ஆளுநர் உரையில் அது குறித்த அறிவிப்பு இடம் பெறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார்.

தமிழகத்தில் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீத நிதியை செலவிட்டு வருவதாக குறிப்பிட்ட நிதியமைச்சர். கொரோனா ஊரடங்கு கால கட்டத்திலும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தமிழக அரசின் சார்பில் இரண்டு தவணைகளாக 2000 ரூபாய் வழங்கி இருப்பதை கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டில் செஸ் வரி 9 ரூபாயாக இருந்த போது அப்போது இருந்த அதிமுக அரசு, மாநில அரசு வரியை 28 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தி இருந்ததாகவும், ஆனால் 2006-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோதும், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை 3 முறை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி குறைத்ததாகவும் தெரிவித்தார். 

உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டுகளில் முதலிடத்தைப் பிடித்தது ‛தாஜ்’

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Lalithaa Jewellery: பொதுமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. பங்குகளை விற்கும் லலிதா ஜூவல்லரி நிறுவனம்!
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
Embed widget