மேலும் அறிய

Petrol-Diesel Price, 19 August: வரி குறைக்காத டீசல் விலை குறையுது... வரி குறைத்த பெட்ரோல் விலை...?

சென்னையில் கடந்த 13ஆம் தேதி வரை பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது. 28 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சென்னையில் நேற்று டீசல் விலை 19 காசுகள் குறைந்து லிட்டர் ஒன்று 94.20 காசுக்கு விற்கப்பட்டது.
31 நாட்களாக ஒரே விலை நீடித்து வந்த நிலையில் விலை 19 காசுகள் குறைக்கப்பட்டது.  

இந்த நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக ஒரு லிட்டர் டீசல் விலை 18 காசு குறைந்து ரூ.94.02க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆறாவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த 13ஆம் தேதி வரை பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது. 28 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “ இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.“ இவ்வாறு அவர் கூறினார்.

Petrol-Diesel Price, 19 August: வரி குறைக்காத டீசல் விலை குறையுது... வரி குறைத்த பெட்ரோல் விலை...?

தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பால் விலை குறைப்பு அன்று நள்ளிரவு முதல் அமலாகி, தமிழ்நாட்டில் மூன்று இலக்கத்தில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை மீண்டும் இரட்டை இலக்கத்தில் விற்கப்பட்டது.  டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல்  உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன்,  ஐமு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026க்குள் மேலும் ரூ.37000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்றார்.

மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை.  மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரிபங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை... ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?

PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!

Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..

Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?

புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...

Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்

Embed widget