மேலும் அறிய

Petrol Diesel Price: நாள்தோறும் ஏற்படும் கால மாற்றம்.. குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரம்..!

Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து 249வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 

இன்றைய விலை

இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 249ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று (ஜனவரி.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.  

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amit shah on Annamalai: தேசிய அரசியலில் அண்ணாஅமலை! பாஜகவில் முக்கிய பதவி! பாராட்டி தள்ளிய அமித்ஷாTrichy Siva: திருச்சி சிவாவுக்கு ஜாக்பார்ட்! ஸ்டாலின் அதிரடி Twist பொன்முடி எதிர்காலம் காலி?PonmudiEPS vs Amit shah | ”சிறைக்கு செல்ல தயார்” எடப்பாடி பழனிசாமி அதிரடி! ஷாக்கான அமித்ஷா! | BJP | ADMKPriyansh Arya Profile:  CSK - வை அலறவிட்ட இளைஞன்! பஞ்சாப்பின் Rocky Boy! யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
முடங்கியது வாட்ஸ்அப்.. ஸ்டேட்டஸ், மெசேஜ் அனுப்ப முடியலையா? இதான் காரணம்!
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
IPL 2025 LSG vs GT: மார்க்ரம், பூரண் சம்பவம்! குஜராத்தை கிழித்தெடுத்த லக்னோ! கோயங்கா ஹாப்பி அண்ணாச்சி
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
Good Bad Ugly: தொடரும் ஹவுஸ்ஃபுல்! காட்சிக்கு காட்சி எகிறும் கலெக்ஷன்! குட் பேட் அக்லி அட்டகாசம்!
Good Bad Ugly: தொடரும் ஹவுஸ்ஃபுல்! காட்சிக்கு காட்சி எகிறும் கலெக்ஷன்! குட் பேட் அக்லி அட்டகாசம்!
எம்ஜிஆர் ஆக துடிக்கும் விஜய்.. அதிமுக 2.0 தான் இலக்கு.. அப்போ தவெகவின் நிலை என்ன?
எம்ஜிஆர் ஆக துடிக்கும் விஜய்.. அதிமுக 2.0 தான் இலக்கு.. அப்போ தவெக நிலை என்ன?
அன்பு கட்டளை... தலைவரான முதல் நாளே நயினார் சொன்ன அந்த வார்த்தை.. செருப்பு போட்ட அண்ணாமலை 
அண்ணன் டா! தம்பி டா! தலைவரான நயினார் போட்ட முதல் கட்டளை.. செருப்பு போட்ட அண்ணாமலை
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...!  எங்கே தெரியுமா ?
வேலை இல்லையா... கவலை வேண்டாம்... உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்...! எங்கே தெரியுமா ?
Embed widget